அண்ணாமலைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த வேலுமணி... கோவை பாஜக பொறுப்பாளர் அதிமுகவில் ஐக்கியம்!

வேலுமணியுடன் செல்வபிரபு
வேலுமணியுடன் செல்வபிரபு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வலதுகரம் போல செயல்பட்டு வந்த பாஜக தகவல் தொழில் நுட்ப அணியின்  கோவை பெருங்கோட்ட பொறுப்பாளர் செல்வ பிரபு அதிமுகவில் இணைந்துள்ளார். 

அண்ணாமலை
அண்ணாமலை

மக்களவைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவினாலும் மிகக் கடுமையான மோதல் போக்கு பாஜக மற்றும் அதிமுக இடையே நடந்து வருகிறது.  தங்கள் கூட்டணிக்கு வராத கோபத்தில் அதிமுகவை மிகக் கடுமையாக எதிர்த்து களப்பணி ஆற்றி வருகிறது பாஜக. அதேபோல அதிமுக நிர்வாகிகள் பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்து அரசியல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த இரண்டு கட்சிகளிலிருந்தும் பரஸ்பரம் முக்கிய பிரமுகர்களை தங்கள் கட்சிக்கு இழுக்கும் வேலைகளை பாஜகவும் அதிமுகவும் செய்து வருகிறது.  அந்த வகையில்   அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 15 பேர் பாஜகவில் இணைந்தனர். இதனையடுத்து அதற்கு பதிலடி தரும் வகையில்  பாஜகவின் மூத்த நிர்வாகியான நடிகை கவுதமியை அதிமுகக்கு கொண்டுவந்தனர்.  இப்படி இரு தரப்பிலிருந்தும் ஏராளமான நிர்வாகிகள் இடம் மாறியுள்ளனர். இரண்டு தரப்பிலும் நிர்வாகிகளை போட்டி போட்டு இழுக்கும் நிலையில், இப்போது அதில் அதிமுக முந்திக்கொண்டு அண்ணாமலையின் வலது கரமாக செயல்பட்டு வந்தவரை தட்டித் தூக்கியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாநில செயலாளரும், கோவை பெருங்கோட்ட பொறுப்பாளருமான  செல்வபிரபுவை அமைச்சர் வேலுமணி அன்பாக அரவணைத்து அதிமுகவுக்கு கொண்டு வந்துள்ளார். இவர் பாஜகவில் கோவை மண்டலத்தில் மிக முக்கிய பொறுப்புகளை கவனித்து வந்தார். அண்ணாமலையின் மிக நெருக்கமான நண்பராகவும் இருந்து வந்தார். இவர் அதிமுகவுக்கு சென்றுள்ளது அங்குள்ள பாஜகவினரை கவலையடைய வைத்திருக்கிறது.

எடப்பாடியார் தேர்தல் பணிகளில் பிஸியாக இருப்பதால் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் செல்வ பிரபு  தன்னை அதிமுகவில் இன்று இணைத்து கொண்டுள்ளார். இதற்கு என்ன பதிலடி கொடுக்கலாம் என்று பாஜகவினர் திட்டமிட்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!

லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!

யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!

'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in