அன்று ஆதரவு... இன்று குண்டாஸ்... முதல்வர் ஸ்டாலினை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

செய்யாறு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக நெட்டிசன்கள் முதல்வர் ஸ்டாலினின் பழைய பதிவு ஒன்றை மீண்டும் பதிவிட்டு விளாசி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மேல்மா கிராமத்தில் சிப்காட் அமைப்பதற்கு பல ஏக்கர் நிலங்களை சிறு குறு விவசாயிகளிடமிருந்து அரசு கையகப்படுத்தி வருகிறது. இதனை எதிர்த்து கடந்த 126 நாட்களாக தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை முன் நின்று நடத்திய 7 பேரை கடந்த 4ம் தேதி போலீஸார் கைது செய்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்ட சிறைகளில் அடைத்துள்ளனர். இதனிடையே, அருள் ஆறுமுகம் உட்பட 7 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள காவல்துறை, கைது செய்யப்பட்ட 7 பேரும் ஏற்கெனவே 8 வழி சாலை போராட்டத்தையும் முன் நின்று நடத்தியவர்கள் எனவும் அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு தொடர் எதிர்ப்புகளை தெரிவித்து வருவதாகவும் விளக்கமளித்துள்ளனர். இதனிடையே அரசு சிப்காட் என்ற பெயரில் தொழிற்துறை வளர்ச்சிக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், ”தன்னை விவசாயி என்று கூறிக் கொள்ளும் இபிஎஸ் சேலம் 8 வழி சாலை பாதிப்புகள் குறித்து முறையிட வந்த விவசாயிகளை கைது செய்ய உத்தரவிட்டதற்கு கண்டனம்” என தெரிவித்துள்ளார். இந்த பதிவை தற்போது மறு பதிவு செய்து வரும் நெட்டிசன்கள், ஆட்சியில் இல்லாத போது விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று முதலமைச்சரான உடன் குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்வதாக விமர்சித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in