பம்பரம் சின்னத்தில் தான் போட்டி - துரை வைகோ உறுதி!

மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ

தமிழகத்தை வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை தருவதில் தொடர்ந்து வஞ்சகம் செய்து வரும் கர்நாடக அரசை கண்டித்தும் அதை தட்டிக் கேட்க வேண்டிய மத்திய அரசும் மௌனம் காப்பதற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதில் திருச்சி, மதுரை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ. காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு தமிழகத்திற்கு உரியநீர் பங்கீடு வழங்காமல் தொடர்ந்து நிராகரித்து வரும் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்தும் இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினையை பேசி தீர்த்து வைக்க வேண்டிய மத்திய பாஜக அரசு மெளனம் காப்பதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக கூறினார்.

கர்நாடக அரசின் இந்த செயலால் தமிழக முழுவதும் சுமார் 3 லட்சம் ஏக்கர் குருவை பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி உள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு உரிய இழப்பிடை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். தமிழக அரசு தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் பங்கீடு பெறுவதற்கு சட்டரீதியாகவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் அவர்கள் நம்முடைய முயற்சிக்கான எந்த பலனையும் வழங்காமல் இருக்கிறார்கள். எனவே, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து கர்நாடக அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதேபோல், குருவை கருகிய நிலையில், அதற்கான இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு 13 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், அதனை மாநில அரசு 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாக தெரிவித்தார். மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிடும் என்று தெரிவித்தார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக கழக துணைப் பொதுச் செயலாளர் ரொகையா, மணவை தமிழ் மாணிக்கம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in