கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

எனக்கு அதைத் திருடும் பழக்கம் உள்ளது... பகிரங்கமாக ஒத்துக்கொண்ட கீர்த்தி சுரேஷ்!

தனக்கு அதை திருடும் பழக்கம் உள்ளதாக நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றின் திறப்பு விழாவிற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு விருந்தினராக உள்ளார்.

பின்னர் அங்கு இருந்த உயர்தர வடிவமைப்புகள் கொண்ட பனாரசி, காஞ்சிபுரம், பட்டோலா, ஐகாட்,ஆர்கன்சா மற்றும் குப்பம் வகை சேலைகளை ஆர்வமுடன் பார்த்து ரசித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கோவைக்கு முதல் முறையாக‌ திறப்பு விழாவிற்கு வருகை தந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி.

நான் ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு படிக்கும் போது கண்ணாடிக்கு முன் நின்று சேலை அணிந்து ரசித்திருக்கிறேன். சேலை கட்டுவது நமது கலாச்சாரத்தை முன்னிறுத்துகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்

இதுபோல் திறப்பு விழாவிற்கு வரும் போது சேலைகளை அதிகளவு வாங்குவேன். சில சமயம் அம்மாவிடம் இருந்தும் சேலையை திருடி விடுவேன்" என நகைச்சுவையாக கூறினார்.

மேலும் கூறுகையில், ரகு தத்தா, ரிவால்வர் ரீட்டா , சைரன் போன்ற படங்களில் நடித்து வருகிறேன். ஜெயம் ரவியுடன் இணைந்து சைரன் என்ற படத்தில் நடித்து வருகிறேன். தற்போதுள்ள காலகட்டத்தில் கைத்தறி புடவை எல்லை மதிப்பு குறைந்துள்ளது. அதனை ஊக்குவிக்கும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும். நமது கலாச்சாரம் அழிந்து வருவதை தடுக்க வேண்டும் என்று கூறினார்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in