பிஎஸ்சி படித்தவர்களுக்கு இந்திய விமான ஆணையத்தில் 1,40,000 ரூபாய் சம்பளத்தில் ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்திய விமான ஆணையம் (Airports Authority Of India or AAI) செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் ஒவ்வொன்றாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (விமான போக்குவரத்து கட்டுப்பாடு) என்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் (விமான போக்குவரத்து கட்டுப்பாடு) என்ற பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு பிஎஸ்சி டிகிரியை இயற்பியல், கணிதம் பாடங்களுடன் அல்லது இன்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களுக்கான வயது வரம்பு 27. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 30. இந்தப் பணிக்கு மாத ஊதியமாக 40 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வரை வழங்கப்படும். கூடுதல் விவரங்களை : https://www.aai.aero/ என்ற இணையதள பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் தம்பதி கைது!
குட் நியூஸ்... ரூ.400க்கு சமையல் சிலிண்டர்; ரூ.5 லட்சம் காப்பீடு; முதல்வர் அறிவிப்பு!
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் படையின் 2வது தளபதி பலி!