'லியோ' படத்தின் கதை இணையத்தில் கசிந்தது... அதிர்ச்சியில் படக்குழு!

லியோ படத்தில் விஜய்
லியோ படத்தில் விஜய்

'லியோ' படத்தின் கதை கசிந்துள்ளதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. இந்தியா மட்டுமல்லாது லண்டன், அமெரிக்கா, கனடா என வெளிநாடுகளிலும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகம் உள்ளது. சென்னை, கோவை, மதுரை போன்ற இடங்களில் திரையரங்குகளில் இந்தப் படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. காலை 9 மணிக்கு இதன் முதல் காட்சி தொடங்க உள்ள நிலையில் 'லியோ' படத்தின் கதை இதுதான் என இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் தகவல் பட குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

லியோ
லியோ

படத்தில் சஞ்சய் தத் விஜப்யின் அப்பாவாக நடித்துள்ளார் எனவும் அப்பா- மகன் இருவருக்கும் ஏற்படும் யுத்தம் தான் 'லியோ' படத்தின் கதை எனவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் எனவும் தெலுங்கு நடிகர் ராம்சரண் இதில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் எனவும் பல தகவல்கள் இந்த படத்தை சுற்றி வெளியாகி கொண்டு இருக்கிறது.

இதற்கெல்லாம் பதில் அளிக்காமல் மௌனம் காத்து வரும் படக்குழு இன்னும் சில தினங்களில் படம் வெளியாகும் போது உங்களுக்கு கதை தெரியவரும். ஆனால், படத்தின் முதல் 10 நிமிடங்களை மட்டும் தவறவிடாதீர்கள் என்று லோகேஷ் கனகராஜ் அப்டேட் கொடுத்து இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in