திருச்செந்தூர் கோயிலில் தரிசனக் கட்டணம் அதிகரிப்பு: ஹெச்.ராஜா கொந்தளிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில்
திருச்செந்தூர் முருகன் கோயில்

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் அபிஷேக கட்டணங்கள் பன்மடங்காக உயர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், ’’கோயில்களையும், இந்துக்களையும் கொள்ளையடிக்கும் கும்பல் தான் அறநிலையத்துறை’’ என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.

திருச்செந்தூர் முருகன் கோயில்
திருச்செந்தூர் முருகன் கோயில்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நேற்று முன்தினம் யாகசாலையுடன் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தரிசனக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது, 100 ரூபாயாக இருந்த விஸ்வரூப தரிசனக் கட்டணம் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண நாளில் 500 ரூபாயாகவும், விசேஷ நாளில் 2 ஆயிரம் ரூபாயாக இருந்த அபிஷேக தரிசனக் கட்டணம், தற்போது ரூபாய் 3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ‘’கோயில்களையும் இந்துக்களையும் கொள்ளையடிக்கும் கும்பல் தான் அறநிலையத்துறை. வழிபாட்டிற்குச் செல்லும் இந்துக்களைச் சுரண்டும் அரசை ஆலயங்களை விட்டு வெளியேற்றுவோம்’’ எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

உஷார்; 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மீண்டும் விலை உயரும் அபாயம்: தொடர்மழையால் செடியிலேயே அழுகும் தக்காளி!

மீண்டும் மீண்டுமா... அடுத்த சிக்கலில் மாட்டித் தவிக்கும் சிவகார்த்திகேயன்!

பிரதமர் மோடி குறித்து அவதூறு: ஆம் ஆத்மிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

கிராமத்தில் 20 முறைக்கும் மேல் மின்தடை: அதிகாரிகளைப் பழிவாங்க கவுன்சிலர் செய்த அதிர்ச்சி காரியம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in