ராஜராஜ சோழன் சதயவிழா - தயாராகும் தஞ்சை பெரிய கோயில்!

தஞ்சை பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயில்

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் இராஜராஜன் சதய விழா வருகிற 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இரண்டு நாட்களும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சதய நாளான 25ம் தேதி மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.

இதேபோல் பல்வேறு கட்சியினர், இயக்கம், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளனர். சதய விழாவை ஒட்டி பெரிய கோயில் வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதால், அதற்கான பந்தல், விழா மேடை உள்ளிட்டவை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in