மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

பாஜக வாஷிங் மெஷினா?... ராஜ்நாத் சிங் தடாலடி பதில்!

எதிர்க்கட்சிகளின் பாஜக வாஷிங்மெஷின் குற்றச்சாட்டுக்கு, பாஜக மூத்த தலைவரும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் பதிலளித்துள்ளார்.

மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் மீது வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை விட்டு சாேதனையிடப்படுகிறது.

மம்தா பானர்ஜி வெளியிட்ட பாஜக வாஷிங் மெஷின் (கோப்பு படம்)
மம்தா பானர்ஜி வெளியிட்ட பாஜக வாஷிங் மெஷின் (கோப்பு படம்)

பின்னர் அத்தகைய தலைவர்கள் பாஜகவில் இணைந்ததும் அவர்கள் மீதான வழக்குகள் கிடப்பில் போடப்படுவது அல்லது போதிய ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றங்களில் தெரிவித்து வழக்கை முடித்து விடும் செயலில் மத்திய பாஜக அரசு ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகின்றன.

பாஜகவில் இணைந்ததும் புகாருக்குள்ளான தலைவர்கள் புனிதர்களாக கட்டமைக்கப்படுவதை குறிப்பிட்டு இது பாஜக வாஷிங்மெஷினின் கைங்கர்யம் என விமர்சிக்கப்படுகிறது. இந்நிலையில் வாஷிங்மெஷின் விவகாரம் குறித்து, பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் மனம் திறந்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் நேற்று பேட்டியளித்துள்ளார். அதில், "எங்களால் தான் அர்விந்த் கேஜ்ரிவால் சிறைக்குச் சென்றதாக சொல்கிறார்கள். அப்படியானால் நீதிமன்றத்தில் அவருக்கு ஏன் நிவாரணம் கிடைக்கவில்லை? நீதிமன்றங்களின் கட்டுப்பாட்டையும் நாங்கள் எடுத்துக் கொண்டோமா? அது சாத்தியமா?

பாஜக வாஷிங்மெஷின் குற்றச்சாட்டு
பாஜக வாஷிங்மெஷின் குற்றச்சாட்டு

இந்தியாவை ஊழலற்ற நாடாக மாற்ற வேண்டும். இதுவே நமது பிரதமரின் தீர்மானம். எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்படுவதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கின்றனர். அவர்கள் நீதிமன்றத்தில் பாதுகாப்பு பெறலாம். ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் ஜாமீன் பெற முடிந்தபோது, மற்ற தலைவர்களுக்கு அது ஏன் கிடைக்கவில்லை?

வாஷிங் மெஷின் என எதுவும் இல்லை. விசாரணை நிறுவனங்கள் தங்கள் வேலையைச் செய்ய வேண்டும். ஒரு குறிப்பிட்ட நபரை கைது செய்யுமாறு நாங்களா சொல்கிறோம்? இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். அவர்கள் (எதிர்க்கட்சியினர்) தங்கள் தவறுகளை, பலவீனங்களை மறைக்க முயற்சிக்கிறார்கள். மக்களைத் தவறாக வழிநடத்துவதன் மூலம் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க முடியும் என தவறாக நினைக்கிறார்கள்" என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...   

தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்வது ஏன்?... மத்திய பாஜக அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி!

அமைச்சர் நேரு மகனுக்கு நெருக்கடி தரும் பாரிவேந்தர்... பெரம்பலூரில் சூரியனை நெருங்கும் தாமரை!

நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவுக்கு சிக்கலா?... தேர்தல் அதிகாரி புகரால் பெரும் பரபரப்பு!

பாஜக வேட்பாளரால் சர்ச்சை... திருவள்ளுவர் சிலைக்கு திருநீறு, குங்குமம் பூசியதால் பரபரப்பு!

அசாமில் அடித்து முன்னேறும் காங்கிரஸ்... கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு பின்னடைவு!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in