நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவுக்கு சிக்கலா?... தேர்தல் அதிகாரி புகரால் பெரும் பரபரப்பு!

ஆ.ராசா பிரச்சாரம்
ஆ.ராசா பிரச்சாரம்

நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவிற்கு மாவட்ட தேர்தல் அதிகாரி சாதகமாக செயல்படுவதாக உதவி செலவினப் பார்வையாளர் புகார் அளித்திருந்த நிலையில், அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஆ.ராசா
ஆ.ராசா

இந்த நிலையில், திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் தேர்தல் செலவின விவரங்களைக் குறைத்துக் காட்டும்படி, மாவட்ட தேர்தல் அதிகாரி தொந்தரவு செய்வதாக உதவி செலவினப் பார்வையாளர் சரவணன் தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், தேர்தல் செலவு விவரங்களை கணக்கிட்ட போது திமுக வேட்பாளர் ஆ.ராசா தாக்கல் செய்த செலவில் பல லட்சம் ரூபாய் வித்தியாசம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 8-ம் தேதி திமுக வேட்பாளரின் செலவின விவரங்களை ஆட்சியரின் முகாம் அலுவலகத்திற்கு கொண்டுவரச் சொல்லி பார்வையிட்டு ஆவணங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும், வேட்பாளரின் செலவு விவரங்களில் ஏதாவது பாதகமாக நடக்கக் கூடாது என தேர்தல் அதிகாரி மிரட்டியதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நீலகிரி தொகுதியில் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெற தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும் என்றும் உதவி செலவின் பார்வையாளர் சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சத்யபிரதா சாஹு
சத்யபிரதா சாஹு

இந்த நிலையில், உதவி செலவின பார்வையாளர் அளித்த புகார் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், விளக்கத்தின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in