குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது... ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!

ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை  வாசிக்கும் சபாநாயகர் அப்பாவு
ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசிக்கும் சபாநாயகர் அப்பாவு

குடியுரிமை திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் ஒருபோதும் அமல்படுத்தப்பட மாட்டாது என ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சட்டமன்றத்தில் உரையாற்றும் ஆளுநர் ரவி
சட்டமன்றத்தில் உரையாற்றும் ஆளுநர் ரவி

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ரவி,  அரசின் சார்பில் தயாரித்து வழங்கப்பட்டிருந்த உரையை வாசிக்க மறுத்து அமர்ந்த நிலையில் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு அதன் தமிழாக்கத்தை  வாசித்து முடித்தார். அதில் குடியுரிமை திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படாது என்பது உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் கொள்கைகள் விவரமாக எடுத்துரைக்கப்பட்டிருந்தன.

'பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு திறம்பட செயல்படுகிறது. நமது மாநிலம் பல பேரழிவுகளை சந்தித்த போதிலும், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க சாதனையை அடைந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு தராதது வருத்தம் அளிக்கிறது. கடும் நிதி நெருக்கடிக்கு இடையே சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்ட பணிகளுக்கு தனது பங்களிப்பை வழங்குவதாக உறுதியளித்த மத்திய அரசு,  தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை' என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சட்டமன்றத்தில் ஆளுநர் ரவி
சட்டமன்றத்தில் ஆளுநர் ரவி

'சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்' என்று அழுத்தம் திருத்தமாக ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தும் என நம்புகிறோம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது 14.54 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ₹6.64 லட்சம் கோடி முதலீடுகள் செய்தவதற்கு நிறுவனங்களுடன் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34% அதிகரித்துள்ளது.

கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் விளைவாக பேருந்துகளில் பெண்கள் பயணிப்பது 40% இருந்து 65% ஆக உயர்ந்துள்ளது. இதனால் பெண்கள் எளிதாக பயணம் செய்யவும், முன்னேறவும் வழி பிறந்துள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முடிவாகிறது தொகுதிகளின் எண்ணிக்கை... மூன்று கட்சிகளுடன் திமுக பேச்சு!

தமிழகத்தில் எமர்ஜென்சியா...? பகீர் கிளப்பிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா!

வெளியானது வேட்பாளர் பட்டியல்... பாஜக மூத்த தலைவர்கள் அதிர்ச்சி!

அயோத்தி செல்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்... பஞ்சாப் முதல்வருடன் ராமர் கோயிலில் வழிபாடு!

தமிழகமே அதிர்ச்சி... ரயில் முன் பாய்ந்து 5 பேர் தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in