திமுக தலைவர் ஸ்டாலினுடன், இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி தலைவர் காதர் மொய்தீன்
திமுக தலைவர் ஸ்டாலினுடன், இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி தலைவர் காதர் மொய்தீன்

இன்று முடிவாகிறது தொகுதிகளின் எண்ணிக்கை... மூன்று கட்சிகளுடன் திமுக பேச்சு!

விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக ஆகிய கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீட்டுக்குழு இன்று  பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் அந்த கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடுகள் முடிவாகும் என்று கூறப்படுகிறது.

ஸ்டாலினுடன் திருமாவளவன்
ஸ்டாலினுடன் திருமாவளவன்

மக்களவைத் தேர்தலையொட்டி திமுக தனது பணிகளை விரைவுபடுத்தியுள்ளது. தேர்தல் அறிக்கையில்  இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்து கனிமொழி தலைமையிலான குழுவினர் மக்களிடம் கருத்து கேட்டு வருகின்றனர். தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் குழுவினர் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தொகுதிப் பங்கிட்டு பேச்சுவார்த்தை குழுவினர் தங்கள் பணிகளை ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே தொடங்கி கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில் இன்று மாலையில் திமுக தனது கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்துகிறது.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், துணை பொதுச் செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் அடங்கிய குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள்

கடந்த மக்களவைத் தேர்தலில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதேபோல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொமதேகவுக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று நடைபெறும் பேச்சு வார்த்தையில் இந்த கட்சிகளுக்கான தொகுதிகள் குறித்த முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in