அயோத்தி செல்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்... பஞ்சாப் முதல்வருடன் ராமர் கோயிலில் வழிபாடு!

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு மனைவி மற்றும் குடும்பத்தினருடன் இன்று வழிபாடு செய்வதற்காக செல்கிறார். அவருடன் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் செல்கிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

உத்திரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில்  புதிதாக  ராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த மாதம் 22 ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.  அதைத்தொடர்ந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அயோத்தி ராமரை வழிபட்டு வருகின்றனர்.  அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு தனக்கு முறையான அழைப்பு வரவில்லை என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே கூறி இருந்தார்.

மேலும் அவர் தனது குடும்பத்துடன் அயோத்தி கோயிலுக்குச் சென்று, வழிபாடு செய்ய விரும்புவதாகவும், அதற்கு யாரும் தன்னை அழைக்க வேண்டியதில்லை என்றும் கூறியிருந்தார். இந்நிலையில்,  தான் கூறியபடி இன்று ராமர் கோவிலுக்கு அவர் வழிபட செல்கிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

மதம் மற்றும் கட்சி பேதங்களைக் கடந்து ஏராளமான தலைவர்களும், தொண்டர்களும்  ராமர்கோவிலுக்கு செல்கிறார்கள். இஸ்லாம் மதத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் அப்படி ராமர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று  தங்கள் மாநில எம்எல்ஏக்களுடன் பேருந்தில்  ராமர் கோவிலுக்குச் சென்றார்.

ஆனால் எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதன் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கோவிலுக்கு செல்லும் பயணத்தை புறக்கணித்தனர். காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, ஓ.பி. ராஜ்பார் தலைமையிலான எஸ்.பி.எஸ்.பி., ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ராஷ்டிரிய லோக் தளம் உள்ளிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் அயோத்தி சென்றனர். இந்நிலையில் டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களின்  முதல்வர்கள் இன்று அயோத்திக்கு செல்வதால் பரபரப்பு கூடியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in