உரிமைத் தொகை கிடைக்கவில்லை... சாலையை மறித்து பெண்கள் போராட்டம்; ஒன்று திரண்டது ஊர்!

சாலை மறியலில் ஈடுபட்டுள்ள ஊர் மக்கள்
சாலை மறியலில் ஈடுபட்டுள்ள ஊர் மக்கள்

தங்கள் கிராமத்தில் பெரும்பாலானவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படவில்லை என்பதால், அதைக் கண்டித்து  தஞ்சாவூர் அருகே ஊர் மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக திரண்டு  சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ளது அரசூர் கிராமம். இந்த கிராமத்தில் மொத்தம் 320 குடும்பங்கள் இருப்பதாகவும்,  அவர்களில் 250 குடும்பங்களுக்கு  உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்றும் அந்த மக்கள் ஊர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அனைவரது விண்ணப்பமும் தவறான காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறி இன்று காலை ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தஞ்சாவூர் -  திருவையாறு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் இறங்கினர்.  இதனால் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக  முடங்கியது. 

இந்த தகவல் அறிந்ததும்  நடுக்காவேரி காவல் நிலைய போலீஸார் மற்றும் தஞ்சாவூர் வட்டாட்சியர் உள்ளிட்டவர்கள் உடனடியாக வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தகுதியான அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள்  உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதேபோல விழுப்புரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக்கு முனபு உரிமைத் தொகை கேட்டு சாலை மறியல் நடந்தது.  இந்த நிலையில் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்திலும் சாலை மறியல் போராட்டம் நடந்துள்ள நிலையில்  உரிமைத் தொகை விவகாரம் தமிழக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்த தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

இதையும் வாசிக்கலாமே...

பிஎஸ்சி படித்தவர்களுக்கு ரூ.1,40,000 சம்பளத்தில் விமான நிலையத்தில் வேலை!

லீக்கானது ‘லியோ' படத்தின் கதை... படக்குழுவினர் அதிர்ச்சி!

பெற்றோரிடம் ரூ.2 லட்சம் பேரம்; குழந்தையை விற்க முயற்சி- அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்

பிரபஞ்ச அழகிப் போட்டியில் புதுமை... 2 திருநங்கைகள் பங்கேற்பு!

எனக்கு அதைத் திருடுற பழக்கம் இருக்கு... நடிகை கீர்த்தி சுரேஷ்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in