இட்லி விலை ரூ.17, பரோட்டா ரூ.55... நிர்ணயம் செய்தது தேர்தல் ஆணையம்!

இட்லி விலை ரூ.17, பரோட்டா ரூ.55... நிர்ணயம் செய்தது தேர்தல் ஆணையம்!

மக்களவைத் தேர்தல் செலவிற்காக தமிழக அரசிடம் 750 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளதாகவும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு தொகை ரூ.95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் 68,144 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளது. 90 ஆயிரம் முதல்தடவை வாக்களிக்கும் வாக்காளர்கள் டிசம்பர் மாதத்திற்கு பின் சேர்ந்துள்ள நிலையில்,18-19 வயதுடைய வாக்காளர்கள் மொத்தம் 10,45,470 பேர் இருக்கின்றனர். சி விஜில் செயலி மூலம் நேற்று ஒரே நாளில் 141 புகார்கள் பெறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 21 புகார்கள் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக சுவர் விளம்பரம் சம்பந்தமான புகார்களே அதிகம் பெறப்பட்டுள்ளது.

தமிழக அரசு
தமிழக அரசு

மக்களவைத் தேர்தல் செலவிற்காக தமிழக அரசிடம் 750 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு தொகை ரூ.95 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட பட்டியலின் படி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6.18 கோடியாக இருந்தது. தற்போது அதிகமானோர் பெயர் பட்டியலில் தங்களை இணைக்க வேண்டும் என கேட்டதன் அடிப்படையில் அதன் எண்ணிக்கை 6.22 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் பெயர் நீக்கத்திற்கான மனுக்களை பரிசீலித்த பிறகு மாற்றம் ஏற்படலாம்” எனவும் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகள்
அரசியல் கட்சிகள்

தொடர்ந்து பேசிய அவர், “தேர்தல் விளம்பரம் தொடர்பாக கட்சிகள் சான்றிதழ் பெற வேண்டும். இது தொடர்பாக இதுவரை 18 அரசியல் கட்சிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஒரு தொகுதிக்கு இரண்டு பேர் என்ற அளவில் இருந்தது. தற்போது செலவின பார்வையாளர்கள் எண்ணிக்கை உயர கூடும். பொது பார்வையாளர்கள் வேட்புமனு பரிசீலனைக்கு ஒரு நாள் முன்னதாக வருகை தருவார்கள். ஒரு சட்டசபைத் தொகுதிக்கு ஒருவர் என்ற விதத்தில் 234 சட்டசபைத் தொகுதிக்கு வீடியோ கண்காணிப்பு குழு நியமிக்கப்படுவார்கள்.

பறக்கும் படை மற்றும் கண்காணிப்புக்குழுவிற்கு அளிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வாகனத்திலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருக்கும். இட்லி- 17 ரூபாய், புரோட்டா - 55 ரூபாய் என்று மாவட்ட அளவில் உணவு பொருட்கள் செலவினத்துக்காக தேர்தல் ஆணையம் நிர்ணயத்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்ப இது வேறுபடும். விலை விவரத்தை ஆலோசித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

“இரட்டை இலை எனக்கே கிடைக்கணும் முருகா'!... திருச்செந்தூரில் ஓபிஎஸ் மனமுருகி பிரார்த்தனை!

'குக் வித் கோமாளி' பாலா செய்த தரமான சம்பவம்... வைரலாகும் வீடியோ!

1 முதல் 9-ம் வகுப்பு வரை இறுதித்தேர்வு எப்போது? பள்ளிக் கல்வித்துறை முடிவு!

விதிமுறைகளை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம்... காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கு!

நீரை சேமிக்கும் புதுமையான டெக்னிக்... வைரலாகும் ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டர் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in