கர்நாடகாவைத் தொடர்ந்து பஞ்சாப்பிலும் சிக்கல்... ஒரு சொட்டு நீரைக் கூட தரமாட்டோம்... சுக்பீர் சிங் பாதல்!

ஆளுநரிடம் மனு அளித்த சுக்பீர்சிங் பாதல்
ஆளுநரிடம் மனு அளித்த சுக்பீர்சிங் பாதல்

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ஒரு சொட்டுநீரை கூட விட்டுக்கொடுக்க முடியாது என சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

சிரோன்மணி அகாலிதளம் சார்பில் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் சுக்பீர்சிங் பாதல் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அகாலி தளம் கட்சியின் தலைவராக இதை சொல்கிறேன். சட்லஜ் யமுனா இணைப்பு நதிகளின் தண்ணீரில் ஒரு சொட்டை கூட வேறு மாநிலங்களுக்கு கொடுக்க அனுமதிக்க மாட்டேன்.

பஞ்சாப் ஆளுநரை இரண்டு முக்கிய விஷயங்களுக்காக நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளோம். எஸ்ஒய்எல் நதிநீர் பிரச்சினை தொடர்பாக முதலில் சந்தித்துள்ளோம். பஞ்சாப் மாநிலத்திற்கு போதுமான அளவு தண்ணீர் இல்லாத நிலையில், ஆம் ஆத்ம கட்சியும், பஞ்சாப் முதலமைச்சரும் ஹரியாணாவுக்கு தண்ணீர் தருவது குறித்து பேசி வருகிறார்கள்.

செய்தியாளர்களிடம் பேசிய சுக்பீர்சிங் பாதல்
செய்தியாளர்களிடம் பேசிய சுக்பீர்சிங் பாதல்

இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். தற்போதைக்கு 25 சதவீத தண்ணீர் மட்டுமே பஞ்சாப்பிற்கென்று உள்ளது. இந்த விவகாரத்தில் முதலில் காங்கிரசும், தற்போது ஆம் ஆத்மி கட்சியும் பஞ்சாபின் தண்ணீரை பங்கீடு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பக்வந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்து, பஞ்சாப் மற்றும் பஞ்சாபிகளை ஏமாற்றியுள்ளனர்” என்றார். கர்நாடகாவில் இதே போன்று தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்று போராட்டம் நடந்து வரும் நிலையில், அதே போல பஞ்சாப்பிலும் அதே போல குரல் எழுந்துள்ளது.

சுக்பீர்சிங் பாதல், பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in