22 ம் தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர்... அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு!

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

இன்று தொடங்கியுள்ள தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் பிப்ரவரி 22 ம் தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றம்
தமிழ்நாடு சட்டமன்றம்

2024 ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் வாசிக்க மறுத்தது, ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி தந்தது என விறுவிறுப்புடன் நடைபெற்ற இன்றைய கூட்டம் தேசிய கீதம் இசைக்கப்பட்டு முடிவடைந்தது.

அதன்பின் சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆராய அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் கூடியது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு "பிப்ரவரி 22ம் தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்" என்று தெரிவித்தார்.

ஆளுநர் உரை மீதான விவாதம், அதற்கான முதல்வர் பதிலுரை ஆகியவை பிப்ரவரி 15 ம் தேதி வரை நடைபெறும். பிப்ரவரி 16 முதல் 18 ம் தேதி வரை பேரவைக்கு விடுமுறை. அதன் பின்னர் பிப்ரவரி 19 ம் தேதியன்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024 - 25 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

அதனைத் தொடர்ந்து மறுநாள் பிப்ரவரி 20 ம் தேதியன்று வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலன்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். 22 ம் தேதி  வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது என்று அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

இந்த நாட்களில் ஆளுநர் உரை விவகாரம் தொடர்பாக பாஜகவும்,  சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அதிமுகவும் சட்டமன்றத்தில் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முடிவாகிறது தொகுதிகளின் எண்ணிக்கை... மூன்று கட்சிகளுடன் திமுக பேச்சு!

தமிழகத்தில் எமர்ஜென்சியா...? பகீர் கிளப்பிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா!

வெளியானது வேட்பாளர் பட்டியல்... பாஜக மூத்த தலைவர்கள் அதிர்ச்சி!

அயோத்தி செல்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்... பஞ்சாப் முதல்வருடன் ராமர் கோயிலில் வழிபாடு!

தமிழகமே அதிர்ச்சி... ரயில் முன் பாய்ந்து 5 பேர் தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in