அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி... திமுகவில் பரபரப்பு!

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் செந்தில் பாலாஜி. தொடர்ந்து அவர் இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவர் மீது 3 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் ஏற்றுக்கொள்ளபடாமல் தொடர்ந்து தள்ளுபடியான நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக அவர் நீடித்து வந்தார். இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

சமீபத்தில் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை 19 முறையாக நீட்டித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையும் வாசிக்கலாமே...

ஆளுநருக்கு அப்பாவு கொடுத்த பதிலடி... தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பு!

'வேலை கிடைக்கவில்லை; ஆனாலும் மக்களின் பாக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்படுகிறது' - மத்திய அரசு மீது ராகுல் தாக்கு

தமிழக அரசின் ஆளுநர் உரை... ஊசிப்போன பண்டம்... எடப்பாடி பழனிசாமி பேட்டி!

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தால் ஆண்மை நீக்கம்... மீண்டும் விவாதத்துக்கு வந்த ‘விதை நீக்கம்’ தண்டனை

“வந்துட்டேன்னு சொல்லு...” சமந்தா சொன்ன சூப்பர் அப்டேட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in