சட்டப்பேரவை தேர்தல் பரபர... மேலும் 3 புதிய மாவட்டங்கள் ராஜஸ்தானில் உதயம்!

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

சட்டப்பேரவை நெருங்கும் சூழலில், காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள பிராந்தியங்களை குறிவைத்து மேலும் 3 மாவட்டங்களை அறிவித்துள்ளார் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்.

பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்கியே புதிய மாவட்டங்கள் உதயமாவதாக முதல்வர் அசோக் கெலாட் அறிவித்திருக்கிறார். மல்புரா, சுஜாங்கர் மற்றும் குச்சமான் ஆகிய இந்த 3 புதிய மாவட்டங்களின் மூலமாக மாநிலத்தில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 53 என்பதாக உயர்ந்துள்ளது. முன்னதாக ஆகஸ்ட் மாதம் 19 புதிய மாவட்டங்கள் ராஜஸ்தானில் உதயமானது குறிப்பிடத்தக்கது.

மக்களின் கோரிக்கை என்று அசோக் கெலாட் குறிப்பிட்டாலும், தங்களுடைய மாவட்டங்கள் பிளவுறுவதற்கு எதிராக, ஒருங்கிணைந்த மாவட்டங்களின் ஒரு தரப்பு மக்கள் சார்பில் பலகட்ட போராட்டங்கள் மற்றும் கடையடைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆகஸ்ட் மாதம் உதயமான 19 புதிய  மாவட்டங்கள்
ஆகஸ்ட் மாதம் உதயமான 19 புதிய மாவட்டங்கள்

வட இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் இரண்டு மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. இங்கு ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள ஆக முடிந்த பிரயத்தனங்களில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸார் எடுத்து வருகின்றனர். எனவே, காங்கிரஸ் வாக்குவங்கியை முழுவதுமாக வளைக்கும் நோக்கில், குறிப்பிட்ட தரப்பினருக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் புதிய மாவட்டங்கள் உருவாகி உள்ளன.

நடப்பாண்டு டிசம்பரில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு சற்று முன்பாக ராஜஸ்தானின் புதிய மாவட்டங்கள் அறிவிப்பாகி உள்ளன. 2018 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிராந்தியங்களில் இருந்தே புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... துப்பாக்கியால் சுட்டு ஆசிரியரை பதற வைத்த மாணவர்கள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

டெம்போவில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள்

விசித்ரா கூட ஒரே பெட்ல படுக்கணும்... பிரதீப் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை!

கவின் திருமணம் குறித்து முதல்முறையாக மனம் திறந்த லாஸ்லியா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in