ஊழலைப் பற்றி பேச தகுதியே இல்லாத கட்சி பாஜகதான்... பிடிஆர் தியாகராஜன் கோபம்!

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

பாஜக மறுமுறை ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ற ஒரு நாடும், அரசியலமைப்பு சட்டமும் இருக்காது என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எச்சரித்துள்ளார்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட தளவாய், அக்ரஹாரம், தாளமுத்து பிள்ளை சந்து, செல்லத்தம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறுத்தி விட்டார்கள் என்று அதிமுக, பொய் பிரச்சாரத்தை செய்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் நான்கு ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது.

அவர்கள் தாலியும் வாங்கவில்லை, தங்கமும் வாங்கவில்லை. நிதியும் அதற்காக ஒதுக்கவும் இல்லை. ஆட்சிக்கு வந்த பிறகு இந்தத் திட்டத்தை துவக்குவது என்பது முடியாத காரியம். அதனால், பெண் கல்விக்காக, ஊக்கத்தொகையாக மாதம் 1000 ரூபாய் என்கிற புதுமைப்பெண் திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்தினோம். பெண்கள் கல்வி பெறுவதற்காகவே இத்தகைய மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தினோம்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

இது சாதாரண தேர்தல் அல்ல, மிக முக்கியமாக நடக்க இருக்கின்ற தேர்தல். இந்தியாவில் ஜனநாயகத்தை படுகொலை செய்து பணநாயகத்தின் மூலம் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற பாஜக அரசு மேல் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. பங்களாதேசை விட பொருளாதாரம் மிகவும் சரிவாக கொண்டு சென்றுள்ளனர். மோசமான ஒரு பொருளாதாரத்தை கையாண்டுள்ளது பாஜக அரசு. ஊழலுக்கும், பாஜகவுக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது. இந்த உலகத்திலேயே ஊழலைப் பற்றி பேசுவதற்கு ஒரு கட்சிக்கு தகுதி இல்லை என்றால், அது பாஜக தான். இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இவர்களால் ஊழல்வாதிகள் என்று வழக்கு போடப்பட்ட 25 நபர்கள் பாஜகவின் வாஷிங் மெஷின் என்ற திட்டத்தால் அனைவரும் சுத்தமாகி விட்டார்கள்.

தேர்தல் பத்திரம்
தேர்தல் பத்திரம்

தேர்தல் பத்திரம் மூலம் லாபமே இல்லாத பல கம்பெனிகள் பல நூறு கோடிகளை தானமாக பாகவுக்கு கொடுத்துள்ளார்கள். மேலும், யாரெல்லாம் ஈடி, ஐடி, சிபிஐ மூலம் வழக்கு விசாரணையில் மாட்டிக் கொண்டார்களோ, அவர்கள் எல்லாம் பேடிஎம் என்பது போல பே பிஎம் என்கிற திட்டத்தில் தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துகிறார்கள். அவர்கள் மேல் இருந்த வழக்குகள் எல்லாம் ரத்து செய்யப்படும். அதற்காகவே பே பிஎம் திட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த பாஜக அரசு இன்னொரு முறை ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்கிற ஒரு நாடும், இந்திய சட்டமைப்பும் என்கிற மக்களாட்சி முறையும் நீடிக்காது" என்று எச்சரித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...   


மாம்பழமா, மைத்துனரா?: கடலூரில் கரையேறப் போவது யார்?

பரபரப்பு... மதுரையில் மு.க அழகிரியின் பண்ணை வீட்டில் கதவை உடைத்து கொள்ளை முயற்சி!

உத்தராகண்டில் சோகம்: பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்ததில் 8 பேர் பலி!

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திடீர் பரபரப்பு... இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக் வீடுகளில் ஈ.டி ரெய்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in