தேர்தல் பணத்தில் ரூ.40 லட்சம் சுருட்டிய பாஜக நிர்வாகிகள்... சொந்தக் கட்சியினரே போஸ்டர் அடித்து கண்டனம்!

தேர்தல் பணிக்குழுவினர் மோசடி செய்ததாக அடிக்கப்பட்ட போஸ்டர்
தேர்தல் பணிக்குழுவினர் மோசடி செய்ததாக அடிக்கப்பட்ட போஸ்டர்

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக பூத் ஏஜென்ட்களுக்கு கொடுத்த பணத்தில் ரூ.40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டிவிட்டதாக பாஜகவினரே புகார் கிளப்பி இருக்கிறார்கள் . அப்படி பணத்தைச் சுருட்டிய நபர்களின் படத்தைப் போட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரைக்குள் போஸ்டர்களையும் ஒட்டி இருக்கிறார்கள் அந்த தில் பார்ட்டிகள்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ராதிகா, அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் ஆகியோர் களத்தில் உள்ளனர். இதில், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக, அந்த மாவட்ட பாஜகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மேலும், தேர்தல் வேலைகளிலும் ஈடுபட்டனர். இந்நிலையில், பாஜக பூத் ஏஜென்ட்களுக்காக கட்சித் தலைமையிலிருந்து ஒரு கணிசமான நிதி வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிதியில் தான் 40 லட்சம் ரூபாய் வரை பாஜக நிர்வாகிகள் சுருட்டிவிட்டதாக பாஜகவினரே மதுரைக்குள் போஸ்டர்களை ஒட்டி இருக்கிறார்கள்.

ராதிகா சரத்குமார்
ராதிகா சரத்குமார்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகளான மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார், பாஜக விருதுநகர் பாராளுமன்ற தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்ட வெற்றிவேல் மற்றும் மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் ஆகிய நான்கு பேர் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பொறுப்பாளராக அக்கட்சி தலைமை சார்பில் நியமிக்கப்பட்டிருந்தனர்.

பாஜக
பாஜக

இந்த நிலையில் இவர்களது புகைப்படத்துடன் திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிக்குட்பட்ட முக்கிய இடங்களில் பாஜக நிர்வாகிகளே போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டரில், ‘பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் ரூபாய் 40 லட்சம் வரை சுருட்டிய இந்த நால்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இந்தப் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சில மணி நேரத்திலேயே கிழிக்கப்பட்ட சம்பவமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியாவை விட்டு வெளியேறுவோம்... டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ் - அப் அதிரடி கருத்து

கர்நாடகாவில் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு... பிரகாஷ் ராஜ், ராகுல் டிராவிட் ஆகியோர் வாக்குகளை செலுத்தினர்

கேரளாவில் விறுவிறு வாக்குப்பதிவு... ராகுல், சுரேஷ்கோபி, சசி தரூர், தேறுவார்களா?

13 மாநிலங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது... ஆர்வமுடன் திரண்ட வாக்காளர்கள்!

பாலிவுட் போனதும் ஆளே மாறியாச்சு... கீர்த்தி சுரேஷின் செம ஹாட் புகைப்படங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in