13 மாநிலங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது... ஆர்வமுடன் திரண்ட வாக்காளர்கள்!

கர்நாடகாவில் வாக்குப்பதிவு துவங்கியது
கர்நாடகாவில் வாக்குப்பதிவு துவங்கியது

கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா உட்பட நாடு முழுவதும் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் உள்ள 102 தொகுதிகளில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் வாக்களிக்க காத்திருக்கும் மக்கள்
அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் வாக்களிக்க காத்திருக்கும் மக்கள்

கேரளாவில் உள்ள மொத்தம் 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல் கட்டமாகவும், ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாகவும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கன்ட்ரோல் யூனிட், வாக்குப்பதிவு இயந்திரம், விவிபிஏடி இயந்திரம்
கன்ட்ரோல் யூனிட், வாக்குப்பதிவு இயந்திரம், விவிபிஏடி இயந்திரம்

இதே போல் அசாமில் 5 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், சத்தீஸ்கரில் 3 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 8 தொகுதிகள், திரிபுராவில் 1 தொகுதி, உத்தர பிரதேசத்தில் 8 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதியில் இந்த வாக்குப்பதிவானது நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு பதிவு நடைபெறும் நிலையில், பொதுமக்கள் அதிகாலை முதல் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு மையங்களில் வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in