வெளியான கருத்துக்கணிப்புகள்... சத்தீஸ்கர், ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்கப் போவது யார் தெரியுமா..?

வெளியான கருத்துக்கணிப்புகள்... சத்தீஸ்கர், ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்கப் போவது யார் தெரியுமா..?

சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது, அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இன்னும் லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை இப்போதே ஆரம்பித்துவிட்டன.

அதற்கு முன்னதாக இந்தாண்டு இறுதியில் மொத்தம் 5 மாநிலங்களில்- மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த 5 தேர்தல்களும் லோக்சபா தேர்தலுக்கான அரையிறுதியாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் தேர்தல் குறித்து தனியார் நிறுவனங்கள் எடுத்த கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சிக்கு 62 இடங்கள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல பாஜகவுக்கு வெறும் 27 இடங்கள் மட்டுமே கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதேபோல 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட சற்று அதிகமாக, 104 தொகுதிகளை பெற்று ஆட்சியமைக்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. பாரதிய ஜனதா கட்சி 90 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 6 இடங்களிலும் வெற்றிபெறும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இரண்டு மாநில கருத்துக்கணிப்பு முடிவுகள் தங்களுக்கு சாதகமாக இல்லாதது பாஜக தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!

'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!

எல்ஐசி ஹைட்டு... எடப்பாடியார் வெயிட்டு!

‘ஆடியோ லாஞ்ச் கேன்சல்’ அதிமுகவைத் தேடிப்போன அண்ணாமலை!

நாளை தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in