பாதிக்கப்பட்ட பெண்களிடம் முதலில் மன்னிப்பு கேளுங்க மோடி... ராகுல் காந்தி பொளேர்!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பிரதமர் நரேந்திர மோடி முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி-யான ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக மாநிலம் ஹாசன் மக்களவைத் தொகுதியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

ஜெர்மன் நாட்டில் தற்போது தங்கியுள்ள பிரஜ்வல், விசாரணை குழு முன்பு ஆஜராக கால அவகாசம் கேட்டிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிரஜ்வலை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இதனிடையே இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியையும், அதன் கூட்டணி கட்சியான பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் கர்நாடகாவில் சிவமோகா தொகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்பி-யான ராகுல் காந்தியை செய்தியாளர்கள் சந்தித்தபோது பிரதமர் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்து பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

இது தொடர்பாக பேசிய ராகுல்காந்தி, ”கர்நாடகாவில் தற்போதைய மிகப்பெரிய பிரச்சனை பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு தான். சுமார் 400 க்கும் மேற்பட்ட பெண்களை அவர் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக தெரிய வருகிறது. இவரைத்தான் பிரதமர் நரேந்திர மோடி முதலில் ஆதரித்து பேசினார். பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் முதலில் பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து, மன்னிப்பு கோர வேண்டும்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

உருவாகிறது ரஜினிகாந்த் பயோபிக்... தனுஷின் ஆசை நிறைவேறுமா?

நடிகை ஸ்ரீதேவியுடன் புகைபிடிக்கும் ராம்கோபால் வர்மா... மார்ஃபிங் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

பெட்ரோல் பங்க் ஊழியரை முகம் சுளிக்க வைத்த பெண்... வைரலாகும் வீடியோ!

காதல் விவகாரத்தில் விபரீதம்... 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!

கோவிஷீல்ட் தடுப்பூசியால் மகள் மரணம்; சீரம் இன்ஸ்டிடியூட் மீது பெற்றோர் வழக்குப்பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in