ரூ.7,500 கோடியில் நலத்திட்டங்கள்... நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர்!

பிரதமர் நாளை மகாராஷ்டிரா பயணம்
பிரதமர் நாளை மகாராஷ்டிரா பயணம்

மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களுக்கு பயணிக்க உள்ள பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்துக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளவுள்ளார். அங்கு ரூ.7,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து புகழ் பெற்ற ஷீரடி சாய்பாபா கோயிலில் தரிசனம் செய்து சிறப்பு பூஜையில் பங்கேற்கிறார்.

பின்னர் கோயிலில் புதிய தரிசன வரிசை வளாகத்தையும் அவர் திறந்து வைக்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவா 37வது தேசிய விளையாட்டு போட்டிகள்
கோவா 37வது தேசிய விளையாட்டு போட்டிகள்

நில்வாண்டே அணையின் ஜல பூஜையை நடத்தி, அதன் இடது கரை கால்வாய் கட்டமைப்பை நாட்டுக்கு, பிரதமர் அர்ப்பணிக்கிறார். 86 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடையும் 'நமோ உழவர் மரியாதை நிதி’ திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

பின்னர், கோவா செல்லும் மோடி, அங்கு முதல்முறையாக நடைபெறும் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in