‘5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் என்பது மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதி ஆகாது’ -கார்கே திட்டவட்டம்!

மல்லிகார்ஜூன் கார்கே
மல்லிகார்ஜூன் கார்கே

’5 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தல் என்பது, எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கான செமி ஃபைனல் ஆகாது’ என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலுக்கான ஜூரம் இப்பொழுதே அரசியல் கட்சிகளை பிடித்தாட்டி வருகின்றன. இவற்றின் மத்தியில் நவம்பரில் நடைபெறவிருக்கும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் என 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் என்பது, மக்களவை தேர்தலுக்கான செமி ஃபைனல் என்று அரசியல் பார்வையாளர்களால் வர்ணிக்கப்படுகின்றன. இந்த சட்டப்பேரவைத் தேர்தல்களின் முடிவுகளே, அடுத்துவரும் மக்களவைத் தேர்தலை முடிவு செய்யும் என்றும் அந்த கணிப்புகள் நீண்டன.

மல்லிகார்ஜூன் கார்கே
மல்லிகார்ஜூன் கார்கே

ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரான மல்லிகார்ஜூன் கார்கே தற்போது அதனை மறுத்துள்ளார். கர்நாடக மாநிலம் கலபுரகியில் இன்று(அக்.25) அளித்த பேட்டியில் “சட்டப்பேரவைத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல் என்பதிலிருந்து முழுதும் மாறுபட்டவை. சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் போன்றவை உள்ளூர் பிரச்சினைகளை முன்னிருத்துபவை. அவற்றுக்கு தீர்வு தர வாய்ப்பாகும் கட்சி அல்லது வேட்பாளருக்கு மட்டுமே இந்த தேர்தல்களில் மக்கள் வாய்ப்பளிப்பார்கள். எனவே சட்டப்பேரவை தேர்தல் என்பது மக்களவைத் தேர்தலுக்கான செமி ஃபைனல் ஆகாது” என கார்கே தெரிவித்துள்ளார்.

அரசியல் களத்தில் கார்கேவின் கருத்து பெரும் விவாதத்தினை ஏற்படுத்தி உள்ளது. கார்கே கூறியதன் எதார்த்தம் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றபோதும், சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பாஜக மற்றும் மோடிக்கு எதிரான அலையை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக்கொள்ளும் என்ற கணிப்புகள் இதில் அடிபட்டுபோயிருக்கின்றன.

மேலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வெற்றி வாய்ப்பில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்புகள் நமுத்துப் போயுள்ளனவா என்ற ஐயத்தையும் அவை எழுப்பியுள்ளன. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் தொடர்பான கருத்துக்கணிப்புகளில் சில, பாஜகவுக்கு ஆதரவான முடிவுகளை பதிவு செய்திருப்பதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பதுங்குகின்றனவா என்ற கேள்வியையும் அவை எழுப்பி உள்ளன.

இதையும் வாசிக்கலாமே...


குட்நியூஸ்... பாதுகாப்பான நகரங்களில் சென்னைக்கு முதலிடம்! உலக அளவில் எத்தனையாவது இடம் தெரியுமா?

நெகிழ்ச்சி... மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு சிலை வைத்த ரசிகர்கள்!

பாலின சமத்துவம்... பெண்கள் வேலைநிறுத்தம்... ஆதரவு தெரிவித்து பிரதமர் பணி புறக்கணிப்பு!

ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா... தஞ்சை பெருவுடையாருக்கு 48 பேரபிஷேகம்!

பிக் பாஸ்7: வைல்ட் கார்டில் நுழையும் அந்த ஐந்து போட்டியாளர்கள் இவர்கள்தானா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in