நாடு முழுவதும் 1,00,000 பேருக்கு பணி நியமன ஆணை; பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்!

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

ஒரு லட்சம் பேருக்கான பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி வாயிலாக வழங்க உள்ளார்.

மத்திய அரசு சார்பில் பல்வேறு துறைகளிலும் பணி நியமனங்களை வழங்கும் வகையில் ரோஜ்கார் மேளா என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஒரே நாளில் பல ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு பணி நியமான ஆணைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்று நாடு முழுவதும் 47 இடங்களில் ரோஜ்கார் மேளா நடைபெற உள்ளது.

ரோஜ்கார் மேளாவில் பணிநியமன ஆணை பெற்றவர்கள்
ரோஜ்கார் மேளாவில் பணிநியமன ஆணை பெற்றவர்கள்

இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, காணொளி காட்சி வாயிலாக ஒரு லட்சம் பேருக்கு பணியமான ஆணைகளை வழங்குகிறார்.

வருவாய்த்துறை, உள்துறை, உயர்கல்வித்துறை, அணுசக்தி துறை, பாதுகாப்பு துறை, மருத்துவத்துறை, பழங்குடியினர் நலத்துறை, ரயில்வே துறை ஆகிய துறைகளில் இந்த பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

இதேபோல் டெல்லியில் கர்மயோகி பவன் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, முதல் கட்ட கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்ட உள்ளார். கர்மயோகி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 880 இணைய வழி கைத்தொழில் பயிற்சி மற்றும் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முடிவாகிறது தொகுதிகளின் எண்ணிக்கை... மூன்று கட்சிகளுடன் திமுக பேச்சு!

தமிழகத்தில் எமர்ஜென்சியா...? பகீர் கிளப்பிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா!

வெளியானது வேட்பாளர் பட்டியல்... பாஜக மூத்த தலைவர்கள் அதிர்ச்சி!

அயோத்தி செல்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்... பஞ்சாப் முதல்வருடன் ராமர் கோயிலில் வழிபாடு!

தமிழகமே அதிர்ச்சி... ரயில் முன் பாய்ந்து 5 பேர் தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in