
’’காவிரி விவகாரத்தில் அரசியல் செய்வது முட்டாள்தனம்; மடத்தனமான ஒன்று. அப்புறம் எதுக்கு ஒரே நாடு, ஒரே வெங்காயம் என்றெல்லாம் சொல்றீங்க’’ என நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசமாக கூறியுள்ளார்.
நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள அவரது படத்திற்கு நடிகர் மன்சூர் அலிகான் மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’நதி என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்று. அதை வைத்து அரசியல் செய்வது அயோக்கியத்தனம், மடத்தனம், முட்டாள்தனம். இதனை எல்லோரும் செய்துகொண்டிருக்கிறார்கள்.
கர்நாடகாவில் உள்ள எல்லா அணைகளிலும் தண்ணீர் கடல் மாதிரி மிதக்கிறது. ஒரு சொட்டுக் கூட தரமாட்டேன் என்று கூறுகிறார்கள். அப்புறம் ஏன் ஒரே நாடு, ஒரே வெங்காயம் என்றெல்லாம் பேசுறீங்க’’ என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!
'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!
எல்ஐசி ஹைட்டு... எடப்பாடியார் வெயிட்டு!
‘ஆடியோ லாஞ்ச் கேன்சல்’ அதிமுகவைத் தேடிப்போன அண்ணாமலை!
நாளை தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்!