விலகவில்லை, பாஜக கூட்டணியில் தான் தொடர்கிறோம்: பண்ருட்டி ராமச்சந்திரன் பகீர் பேட்டி!

ஓபிஎஸ் - பண்ருட்டி ராமச்சந்திரன்
ஓபிஎஸ் - பண்ருட்டி ராமச்சந்திரன்

"பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் தொடர்கிறோம். பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக நாங்களும் அறிவிக்கவில்லை. அவர்களும் அறிவிக்கவில்லை" என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை தேர்தல்
மாநிலங்களவை தேர்தல்

மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, போட்டியிடும் தொகுதி உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது, பிற கட்சிகளில் இணைவது உள்ளிட்டவை நடந்து வருகின்றன. தேர்தல் பணிகளில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பரபரப்பாக உள்ளன.

தமிழ்நாடு முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வந்த 'என் மண், என் மக்கள்' யாத்திரை நேற்றுடன் நிறைவடைந்தது. இதையொட்டி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மாதப்பூரில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்று உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழருவி மணியன், ஜான் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆனால், இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், சமக தலைவர் சரத்குமார் ஆகியோர் பங்கேற்கவில்லை. குறிப்பாக, இக்கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்ளாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

இந்த நிலையில் சென்னையில் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை இன்று சந்தித்தனர். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், “இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் தொடர்கிறோம். பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக நாங்களும் அறிவிக்கவில்லை, அவர்களும் அறிவிக்கவில்லை.

எதிர்க்கட்சிகளின் சார்பில் இந்தியா என்ற பெயரில் கூட்டணியை அமைத்து போட்டியிடுகிறார்கள். பல கட்சிகள் சேர்ந்து ஆட்சியைப் பிடித்து குழப்பத்தை ஏற்படுத்தினார்களே தவிர, நிலையான ஆட்சியை கொடுக்கவில்லை. இந்தியாவில் நிலையான ஆட்சி வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். நிலையான ஆட்சி தரக்கூடிய ஆற்றல், மோடிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இருக்கிறது” என்றார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு வந்ததா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “விருந்துக்கு வருபவர்கள் சாப்பிட்ட பிறகுதான் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடுவார்கள். அதுபோல பாஜகவினர் விருந்தினர்களைத் தான் அழைத்துள்ளார்கள். அதனால் வீட்டில் இருப்பவர்களை அழைக்க வேண்டிய அவசியமில்லை” என பதிலளித்தார்.

இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக மாநில தலைவருடனும், மேல்மட்ட தலைவர்களுடனும் தொடர்ந்து பேசி வருகிறோம். தேர்தல் கூட்டணி தொடர்பாக நாளை ஆலோசனை நடத்த உள்ளோம்.

தமிழ்நாடு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க நேரம் கேட்கவில்லை. காலம் கனிந்து வருகிறது. பொறுமையாக இருங்கள். நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி வரும். நாளை நடைபெறும் மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசித்து உரிய தீர்மானங்கள் மூலமாக வெளிப்படுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


இந்திய நிறுவனங்கள் 10% சம்பள உயர்வை அறிவிக்கும்... குஷிப்படுத்திய கருத்து கணிப்பு முடிவுகள்!

படப்பிடிப்பில் நடிகையை அடித்த இயக்குநர் பாலா...பரபரப்பு வீடியோ!

தமன்னாவுக்கே டஃப் கொடுக்கும் யானை... காவாலா பாட்டுக்கு கலக்கல் டான்ஸ்!

லீக்கானது ’வேட்டையன்’ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ... போலீஸ் சீருடையில் மாஸாக வரும் ரஜினி!

அடடே மனோகர் திடீர் மறைவு... ஆழ்ந்த சோகத்தில் ரசிகர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in