இந்திய நிறுவனங்கள் 10% சம்பள உயர்வை அறிவிக்கும்... குஷிப்படுத்திய கருத்து கணிப்பு முடிவுகள்!

நடப்பாண்டில் 10 சதவீத ஊதிய உயர்வுக்கு வாய்ப்பு என கணிப்பு
நடப்பாண்டில் 10 சதவீத ஊதிய உயர்வுக்கு வாய்ப்பு என கணிப்பு

2024ம் ஆண்டில் இந்திய நிறுவனங்கள் சராசரியாக 10 சதவீதம் சம்பள உயர்வை வழங்கும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.

மத்திய அரசு சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்த புள்ளிவிவரம் ஒன்றில், இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவித்திருந்து. ஆனால் பல்வேறு தரப்பினரும் தங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளில் ஊதிய உயர்வு போதுமான அளவு கிடைக்கவில்லை என கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு இந்திய நிறுவனங்கள் எந்த அளவிற்கு சம்பள உயர்வு வழங்கும் என்பது குறித்து கணக்கெடுப்பு ஒன்று எடுக்கப்பட்டது. மெர்செர்ஸ் என்ற அமைப்பு மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது.

நடப்பாண்டில் 10 சதவீத ஊதிய உயர்வுக்கு வாய்ப்பு என கணிப்பு
நடப்பாண்டில் 10 சதவீத ஊதிய உயர்வுக்கு வாய்ப்பு என கணிப்பு

அதன்படி இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் இந்த ஆண்டு சராசரியாக 10 சதவீத சம்பள உயர்வை அறிவிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டோமொபைல் உற்பத்தி மற்றும் பொறியியல் துறைகள் அதிக உயர்வை காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023ம் ஆண்டில் சராசரி சம்பள உயர்வு 9.5 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் மெர்சர் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பின்படி, இந்த போக்கு இந்தியாவின் வலுவான பொருளாதார செயல் திறனையும், புதுமை மற்றும் திறமைக்கான மையமாக வளர்ந்து வரும் ஈர்ப்பையும் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் 10 சதவீத ஊதிய உயர்வுக்கு வாய்ப்பு என கணிப்பு
நடப்பாண்டில் 10 சதவீத ஊதிய உயர்வுக்கு வாய்ப்பு என கணிப்பு

இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல் உற்பத்தி, பொறியியல் மற்றும் வாழ்க்கை அறிவியல் துறைகளில் பணிபுரயும் ஊழியர்கள் அதிக சம்பள உயர்வுகளை எதிர்நோக்குவது தெரியவந்துள்ளது. மே மற்றும் ஆகஸ்ட் 2023 க்கு இடையில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில் 1,474 நிறுவனங்களிடமிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டது. 6000க்கும் மேற்பட்ட வேலைப்பிரிவுகள் மற்றும் 21 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு தொழில்களில் உள்ள சம்பளப் போக்குகளில் கவனம் செலுத்தப்பட்டது. தனிப்பட்ட செயல் திறன், நிறுவன செயல் திறன் மற்றும் சம்பள வரம்பின் நிலை ஆகியவை அதிகரிப்புகளை நிர்ணயிக்கும் முதல் மூன்று காரணிகளாக இருந்ததாக மெர்ச்சர் நிறுவனத்தின் மான்சீ சிங்கால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சராசரி தகுதி ஊதிய உயர்வுகள் 2024ல் மட்டும் 10 சதவீதம் மட்டும் என்று இந்த கருத்துக்கணிப்பின் முடிவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் திட்டமிடப்பட்டுள்ள சம்பள உயர்வுகள், இந்திய சந்தையில் நம்பிக்கை மற்றும் தொழில்கள் மீதான நம்பிக்கை இரண்டையும் எடுத்துக்காட்டுகின்றன. ஏஐ மற்றும் ஆட்டோமேஷன் மீதான தொடர்ச்சியான கவனம், ஆட்டோமொபைல் உற்பத்தி மற்றும் பொறியியல் மற்றும் வாழ்க்கை அறிவியல் போன்ற முக்கிய தொழில்கள் புதிய கட்ட வளர்ச்சிக்கு சென்றுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


“28 பைசா மோடி...” தெறிக்கவிடும் உதயநிதி ஸ்டாலின்!

குட் நியூஸ்... புற்றுநோயை குணப்படுத்த மாத்திரை போதும்... டாடா இன்ஸ்டிட்யூட் சாதனை!

பாலத்தை உடைத்துக் கொண்டு பாய்ந்த பேருந்து... 31 பேர் பலியான கொடூர விபத்து!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை... லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

ஈரோடு ஸ்தம்பித்தது... ரூ.300 கோடி இழப்பு; 50,000 விசைத்தறிகள் வேலைநிறுத்தம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in