தமன்னாவுக்கே டஃப் கொடுக்கும் யானை... காவாலா பாட்டுக்கு கலக்கல் டான்ஸ்!

ஆட்டம் போட்ட யானை...
ஆட்டம் போட்ட யானை...
Updated on
1 min read

'ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாட்டுக்கு நடுரோட்டில் பொம்மை யானை கியூட்டாக நடனம் ஆடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமன்னாவின் ஆட்டத்துக்கு பறக்கவிட்டதைப் போலவே யானையின் ஆட்டத்துக்கும் ரசிகர்கள் தங்கள் ஹார்ட்டை பறக்கவிட்டு வருகின்றனர்.

தமன்னா
தமன்னா

டிரெண்டிங் பாடல்களுக்கு ரசிகர்கள் நடனம் ஆடி இணையத்தில் பதிவிடுவது வழக்கம். அப்படியான பாடல்களுக்கு குழந்தைகளும் விலங்குகளும் நடனம் ஆடும்படியான வீடியோ பார்ப்பதற்கே அழகாக இருக்கும். அப்படியான கியூட்டான ஒரு வீடியோதான் இணையத்தில் இப்போது வைரலாகி இருக்கிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் ‘ஜெயிலர்’. இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியிலும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஈடுபட்டுள்ளார்.

’ஜெயிலர்’ படத்தில் அனிருத் இசையில் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆனது. இந்தப் படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது கூட, பின்னணி இசை இல்லாமல் தான் படத்தைப் பார்த்தபோது சுமாராக இருந்ததாகவும் ஆனால், அனிருத் இசையோடு படம் பார்த்தபோது வேற லெவலில் இருந்ததாகவும் பாராட்டி இருந்தார். குறிப்பாக, இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘காவாலா’ பாடல் இணையத்தில் தாறுமாறு ஹிட்டடித்தது.

ஏஐ வெர்ஷன், குழந்தைகள் நடனம் என இந்தப் பாடல் கடந்த வருடத்தில் அதிகம் விரும்பப்பட்ட பாடலாக இருந்தது. யூடியூபிலும் 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது. இப்போது பொம்மை யானை ஒன்றில் உள்ளே ஆட்கள் இருக்கும்படி செட் செய்து ‘காவாலா’ பாட்டுக்கு நடனம் ஆட விட்டிருக்கிறார்கள். பார்த்தவுடன் ஒரு நிமிடம் நிஜ யானைதான் நடனம் ஆடுகிறதோ என பலரும் இந்த யானை டான்ஸூக்கு லைக்ஸ் தெறிக்க விட்டு வருகிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...


“28 பைசா மோடி...” தெறிக்கவிடும் உதயநிதி ஸ்டாலின்!

குட் நியூஸ்... புற்றுநோயை குணப்படுத்த மாத்திரை போதும்... டாடா இன்ஸ்டிட்யூட் சாதனை!

பாலத்தை உடைத்துக் கொண்டு பாய்ந்த பேருந்து... 31 பேர் பலியான கொடூர விபத்து!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை... லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

ஈரோடு ஸ்தம்பித்தது... ரூ.300 கோடி இழப்பு; 50,000 விசைத்தறிகள் வேலைநிறுத்தம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in