லீக்கானது ’வேட்டையன்’ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ... போலீஸ் சீருடையில் மாஸாக வரும் ரஜினி!

மாஸாக வரும் ரஜினி
மாஸாக வரும் ரஜினி
Updated on
1 min read

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. போலீஸ் சீருடையில் காரில் ரஜினி மாஸாக வந்திறங்கும் அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘வேட்டையன்’ படப்பிடிப்பில் இருக்கிறார். கேரளா, கன்னியாகுமரி, மும்பை, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்து இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடக்கிறது. இதற்காக, நேற்று அதிகாலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக ஹைதராபாத் புறப்பட்டார் ரஜினி.

இந்தப் படத்தில் ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை படக்குழு டைட்டில் கிளிம்ப்ஸ் மூலம் தெரியப்படுத்தியது. ஹைதராபாத் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போலீஸ் சீருடையில் நடிகர் ரஜினிகாந்த் மாஸாக காரில் வந்திறங்கி இருக்கிறார். அவரைப் பார்த்ததும் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் விசிலடித்தும் ‘தலைவா தலைவா’ எனக் கூச்சலிட்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

’வேட்டையன்’ படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் ‘தலைவர் 171’ படத்தில் நடிக்க இருக்கிறார். இதனை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதுமட்டுமல்லாது, பாலிவுட்டில் பிரபல இயக்குநர், தயாரிப்பாளராக இருக்கும் சஜித் நாடியாட்வாலாவுடனும் இந்திப் படத்துக்க்காக கைக்கோத்திருக்கிறார் ரஜினி. இதுகுறித்தான அறிவிப்பு நேற்று வெளியானது. பல வருடங்களுக்குப் பிறகு நடிகர் ரஜினி நேரடி இந்திப் படத்தில் நடிப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


“28 பைசா மோடி...” தெறிக்கவிடும் உதயநிதி ஸ்டாலின்!

குட் நியூஸ்... புற்றுநோயை குணப்படுத்த மாத்திரை போதும்... டாடா இன்ஸ்டிட்யூட் சாதனை!

பாலத்தை உடைத்துக் கொண்டு பாய்ந்த பேருந்து... 31 பேர் பலியான கொடூர விபத்து!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை... லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

ஈரோடு ஸ்தம்பித்தது... ரூ.300 கோடி இழப்பு; 50,000 விசைத்தறிகள் வேலைநிறுத்தம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in