முதல்வர் கூட்டத்தில் திடீர் பரபரப்பு.. மகளின் கொலைக்கு நியாயம் கேட்டப்படி கதறியழுத தாய்!

முதல்வர் கூட்டத்தில் திடீர் பரபரப்பு.. மகளின் கொலைக்கு நியாயம் கேட்டப்படி கதறியழுத தாய்!

தன்னுடைய மகளின் கொலைக்கு நியாயம் கேட்டப்படி கதறியழுதபடியே, உபி மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்ட விழாவில், தாய் ஒருவர் கூச்சலிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

தங்கள் மகளை எரித்துக் கொலை செய்தவர்கள் மீது இதுவரையில் மாநில போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த தாய் கதறியழுதபடியே, உபி முதல்வர் கலந்து கொண்ட பாஜக மகளிரணி கூட்டத்தில் கூச்சலிட்டார்.

நாடாளுமன்றம், சட்டபேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையொட்டி,உபி மாநிலம் ஹத்ராஸ் நகரில் பாஜ மகளிர் அணி சார்பில் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

விழாவில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘‘ உபி அரசு பெண்கள் நலன்கள் மற்றும் அவர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்துள்ளது’’ என்று பேசினார்.

அப்போது தன்னுடைய மகளை கூட்டத்திற்கு அழைத்து வந்திருந்த பெண் ஒருவர், தங்களுக்கு நியாயம் வேண்டும் என அழுதபடியே கூச்சலிட்டனர். மஞ்சுதேவி என்ற அந்த பெண்ணின் மகள் பிரீத்தி (30) என்பவர் வரதட்சணைக் கொடுமை காரணமாக கடந்த 1ம் தேதி எரித்துக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகளின் கணவன் வீட்டார் மீது இதுவரை போலீஸார், புகாரளித்தும் கூட எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தனது மகளைக் கொலை செய்த கணவன் குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சத்தம் போட்டார்.

இரண்டு பெண்களும் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து புகார் கொடுக்க மேடையை நோக்கி சென்றனர். ஆனால், பெண் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். முதல்வர் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

உஷார்... தமிழகத்தின் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

பிரபல கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்!

பரபரப்பு… அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!

அதிர்ச்சி... புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை!

அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி... வாக்குவாதத்தால் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in