உஷார்... வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்... சென்னை உட்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை குறிக்கும் வகையில் சென்னை, கடலூர் உட்பட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை நிறைவடைந்து வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இதனிடையே வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.

இது மேலும் வலுவடைய கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், கரையோர மக்கள் மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் ஆகிய 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

இதன் காரணமாக மீனவர்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மிதமானது முதல் கனமான மழை வரை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், வங்கக்கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in