பரபரப்பு… அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!

பரபரப்பு… அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!

செங்கல்பட்டு அருகே வேடமங்கலத்தில் அதிமுக கவுன்சிலர் அன்பரசன் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் 9-வது வார்டு உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்தார். முன்பகை காரணமாக இவருக்கு விரோதிகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அன்பரசன் கீரப்பாக்கத்தில் படத்திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக சென்றிருந்தார்.

அப்போது, மர்ம கும்பல் ஒன்று கவுன்சிலர் அன்பரசன் மீது நாட்டு வெடிகுண்டு வீசி, பின்னர் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில், கவுன்சிலர் அன்பரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த போலீஸார், அன்பரசனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொடூர கொலையை செய்தது யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக அதிமுக கவுன்சிலர் அன்பரசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதிமுக கவுன்சிலர் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in