அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி... வாக்குவாதத்தால் பரபரப்பு!

டென்மார்க் ஓபன் போட்டியில் பி.வி.சிந்து தோல்வி
டென்மார்க் ஓபன் போட்டியில் பி.வி.சிந்து தோல்வி

டென்மார்க் ஓபன் பேட்மிட்டன் தொடரில் அரை இறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டென்மார்க்கில் ஓபன் பேட்மிட்டன் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் அரையிறுதி போட்டி வரை இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முன்னேறி இருந்தார். நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதியில் உலகின் முதல் நிலை வீராங்கனை ஆன ஸ்பெயினை சேர்ந்த கரோலினா மரினை பி.வி.சிந்து எதிர் கொண்டார்.

போட்டியில் வாக்குவாதம் செய்த சிந்து, கரோலினாவுக்கு மஞ்சள் அட்டை
போட்டியில் வாக்குவாதம் செய்த சிந்து, கரோலினாவுக்கு மஞ்சள் அட்டை

இருவரும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், போட்டியின் நடுவே வீராங்கனைகளுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும், போட்டி நடுவர் மஞ்சள் அட்டை வழங்கி எச்சரித்தார். போட்டி முடிவில், 18-21, 21-19, 7-21 என்ற செட் கணக்கில் கரோலினாவிடம் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.

இவ்வாண்டில் சிந்துவுக்கு 4வது அரையிறுதி தோல்வி
இவ்வாண்டில் சிந்துவுக்கு 4வது அரையிறுதி தோல்வி

இதன் மூலம் அவர் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இதனிடையே இந்த ஆண்டில் பி.வி.சிந்து பங்கேற்ற தொடர்களில், அவர் அரையிறுதி போட்டிகளில் சந்தித்த 4வது தோல்வி இதுவாகும். சிந்து தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவது இந்திய பேட்மின்டன் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in