‘முட்டாள்களின் ராஜாவே...’ ராகுல் காந்தியை வகையாய் வாரிய மோடி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மத்திய பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கடைசி சுற்று பிரச்சாரத்தில் இன்று சீற்றத்துடன் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை ’முட்டாள்களின் ராஜா’ என்று விளித்தார்.

நவ.17 அன்று மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை இழக்க விரும்பாத பாஜக - கைப்பற்றத் துடிக்கும் காங்கிரஸ் இடையே கடும்போட்டி நிலவுகிறது. இதற்கான இறுதிச்சுற்று பிரச்சாரத்தின் அங்கமாக இன்று ’பேதுல்’ பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, காங்கிஸ் கட்சிக்கு எதிராக சீற்றத்துடன் பேசினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

”மத்திய பிரதேச தேர்தலில் காங்கிரஸ் தனது தோல்வியை வாக்குப்பதிவுக்கு முன்னரே ஒப்புக்கொண்டுள்ளது; கடைசி நேரத்தில் அக்கட்சி அதிர்ஷ்டத்தை நம்பி இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து, முத்தலாக்கிற்கு எதிரான சட்டம் மற்றும் ராமர் கோவில் கட்டுவது ஆகியவற்றை பாஜக நிறைவேற்றும் என்று காங்கிரஸ் ஒருபோதும் நம்பவில்லை. ஆனால் இதையெல்லாம் நாங்கள் உறுதியாக நிறைவேற்றி உள்ளோம்” என்ற மோடி பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசும்போது, “மத்திய பிரதேச மாநில மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்; இது எனது உத்தரவாதம்” என்று உறுதியளித்தார். மீண்டும் காங்கிரஸ் கட்சி பக்கம் திரும்பியவர், ராகுல் காந்தியை ‘முட்டாள்களின் ராஜா’ என்று சாடினார்.

மோடி - ராகுல் காந்தி
மோடி - ராகுல் காந்தி

திங்களன்று மத்திய பிரதேசம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ’மக்களின் பாக்கெட்டுகளில் உள்ள மொபைல் போன்கள் அனைத்தும் ’மேட் இன் சைனா’ என்று இருப்பதாகவும், அவை அனைத்தும் இனி ’மேட் இன் மத்தியப் பிரதேசமாக’ மாற வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார். அதாவது அவ்வாறு மாற காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக இன்று பேசிய பிரதமர் மோடி, “முட்டாள்களின் ராஜா எந்த உலகில் வாழ்கிறார் என்று தெரியவில்லை. நாடு அடையும் வளர்ச்சி அவர்கள் கண்ணுக்கும் தெரிவதில்லை. வீட்டிலேயே அமர்ந்திருப்பவர்களுக்கு வெளியில் நடப்பது தெரிவதில்லை. உலகிலேயே மொபைல் போன் தயாரிப்பில் இந்தியா இரண்டாவது தேசமாக மாறி வருகிறது” என்று சாடினார்.

இதையும் வாசிக்கலாமே...

சிவகாசி : தீபாவளிக்கு ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை!

நாளை தெறிக்கப் போகுது தமிழகம்... 234 தொகுதிகளில் 8,647 கி.மீ தூரம் திமுக வாகனப் பேரணி!

பனிக்குடம் உடைந்து கதறிய கர்ப்பிணி: 108 ஆம்புலன்ஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

இடுப்பளவு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: தொடர் மழையால் விவசாயிகள் கண்ணீர்!

ரூ.40 லட்சம் மதிப்புள்ள இறால்கள் மடிந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in