மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைக்குமா?... நாளை விசாரிக்கிறது உயர் நீதிமன்றம்!

வைகோ
வைகோ

மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க உத்தரவிடக்கோரிய அவசர முறையீட்டு வழக்கை நாளை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கிறது.

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 2006 ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 5.98 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளதாகக் கூறி, மதிமுக கட்சியின் அங்கீகாரத்தைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

அதன்பின் கடந்த 2014 ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தேர்தல் ஆணையத்துக்கு மதிமுக மனு அனுப்பியது.

பம்பரம் சின்னம்
பம்பரம் சின்னம்

பம்பரம் சின்னம் பொதுச் சின்னம் இல்லை என்பதாலும், வேறு எந்த கட்சியும் அந்த சின்னத்தைக் கோரவில்லை என்பதாலும், மக்களவைத் தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்பதாலும், தங்கள் மனுவைப் பரிசீலித்து, பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று வைகோ தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்ச் 1ம் தேதி நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து மதிமுக அளித்த மனுவை பரிசீலித்து இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

வைகோ
வைகோ

இதுவரை தேர்தல் ஆணையம் சின்னம் குறித்து எந்த தகவலையும் மதிமுகவுக்கு தெரிவிக்காததால் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் மூன்று நாட்களே உள்ளது, இன்னும் தங்களது கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை என அவசர முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அவசர முறையீட்டு மனுவை நாளை விசாரிப்பதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. உதயசூரியன் சின்னத்தில் நிற்குமாறு திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரைவைகோவை திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் தங்களது சின்னமான பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று துரை வைகோ உறுதியாக கூறியிருக்கிறார். இந்த நிலையில் இன்னும் சின்னம் கிடைக்காதால் கட்சியினர் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். 

இதையும் வாசிக்கலாமே...

இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!

லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!

யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!

'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in