ஓட்டுக்கு பணம்... உத்திரவாதம் அளித்த அமைச்சர் மீது பாய்ந்தது வழக்கு!

கோவிந்த் சிங் ராஜ்புத்
கோவிந்த் சிங் ராஜ்புத்

அதிக வாக்குகள் பதிவாகும் வாக்குச்சாவடிக்கு லட்சங்களில் பரிசளிப்பதாக வாக்குறுதி அளித்த மத்திய பிரதேச மாநில அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் நவ.17 அன்று சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அங்கே தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், அதற்கு இடம்கொடாது ஆட்சியை தட்டிப்பறிக்க காங்கிரஸ் கட்சியும் தீவிர கோதாவில் குதித்துள்ளன.

கோவிந்த் சிங் ராஜ்புத்
கோவிந்த் சிங் ராஜ்புத்

இதற்கிடையே தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதன் மத்தியில், அதனை மீறும் வகையில் செயல்பட்டதாக மாநில அமைச்சர் ஒருவர் மீது தேர்தல் ஆணையம் புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநில போக்குவரத்து மற்றும் வருவாய்த்துறை அமைச்சராக இருக்கும் கோவிந்த் சிங் ராஜ்புத் பேசிய காணொலி ஒன்று, சமூக ஊடகங்களில் வைரலானது இதற்கு காரணமானது.

பாஜகவுக்கு அதிக வாக்குகள் பதிவாகும் வாக்குச்சாவடிக்கு ரூ25 லட்சம் தருவதாக அந்த வீடியோவில் அமைச்சர் கோவிந்த் சிங் பேசியிருந்தார். ஓட்டுக்கு பணம் அளிக்கும் வகையில் அப்பட்டமாகவும், வெளிப்படையாகவும் அமைச்சர் பேசியதாக, அவர் மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியது. கோவிந்த் சிங் போட்டியிடும் சுர்கி சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் அதிகாரி அளித்த அறிக்கையின் அடிப்படையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

‘இந்த நடவடிக்கை போதாது; கோவிந்த் சிங் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் குதித்துள்ளது. ’தோல்வி பயம் காரணமாக பாஜகவினர் இப்படியான நடவடிக்கையில் ஈடுபடுவதாக’ அதனையே தேர்தல் பிரச்சாரமாகவும் காங்கிரஸ் மாற்றியதில், பாஜக சங்கடத்தில் சிக்கி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வங்கிகளுக்கு பறந்த புதிய உத்தரவு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக உள்ளார்- அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!

‘5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் என்பது மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதி ஆகாது’ -கார்கே திட்டவட்டம்!

யாரை ஏமாற்ற கூட்டம் நடத்துகிறீர்கள்?- ராமதாசுக்கு காடுவெட்டி குரு மகள் கேள்வி!

33 வருடம்... என் இதயம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது! அமிதாப்புடன் நடிக்கும் ரஜினி நெகிழ்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in