திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் தமிழைக் கட்டாய மொழியாக்க முடிந்ததா?: எல்.முருகன் ஆவேசம்!

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

திமுக கட்சியினரின் பள்ளிகளில் தமிழை கட்டாய மொழியாக்க முடிந்ததா என முதலமைசர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு முதல்வ மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து எக்ஸ் பக்கத்தில் இன்று பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தமிழ் குறித்து பிரதமர் பேசிய கருத்துகளை அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சரும், நீலகிரி தொகுதி வேட்பாளருமான எல்.முருகன், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தள பக்கத்தில், கடந்த காலங்களில், பல்வேறு நாடுகளுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று வரும் பிரதமர், திருக்குறள் உள்ளிட்ட தமிழின் தொன்மைக்கால இலக்கியங்கள் ஒவ்வொன்றையும் உலக அரங்கில் முன்மொழிந்து வருகிறார். இதை முதலமைச்சர் பார்ப்பதில்லையா? ‘காசித் தமிழ்ச் சங்கமம்’ விமரிசையாக நடத்தப்பட்டது என்பதெல்லாம் முதலமைச்சருக்கு நினைவில்லையா?’ என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மேலும், ‘தமிழ் தான் எல்லாம் என்று இத்தனை ஆண்டு காலமாக பொய் சொல்லியே தமிழ் மக்களை ஏமாற்றி வந்த உங்களால், உங்களின் கட்சிக்காரர்கள் நடத்துகிற தனியார் பள்ளிகளில் தமிழைக் கட்டாய மொழியாக்க முடிந்ததா? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்றால், உங்கள் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து தமிழின் பெயரைச் சொல்லியே புளுகி வரும் உங்களைப் பற்றி சுயபரிசோதனை செய்து பாருங்கள் முதல்வர் அவர்களே’ என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...    

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி!

பெங்களூருவில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு!

நடுக்கடலில் பரபரப்பு... கடற்கொள்ளையர்களைச் சுற்றி வளைத்த இந்திய கடற்படை!

கோயில் திருவிழாவில் அதிர்ச்சி... தேர்ச்சக்கரத்தில் சிக்கி ஊர்க்காவல் படை வீரர் பலி!

46 கோடி ரூபாய்க்கு வரி செலுத்துங்கள்... வருமான வரித்துறை நோட்டீஸை பார்த்து கல்லூரி மாணவர் அதிர்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in