பெங்களூருவில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு!

பள்ளியில் நடைபெற்ற வெடிகுண்டு சோதனை
பள்ளியில் நடைபெற்ற வெடிகுண்டு சோதனை

பெங்களூரு மாவட்டத்தில் உள்ள ஆனேகலில் உள்ள புகழ்பெற்ற தனியார் பள்ளிக்கு மெயில் மற்றும் தபாலில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனேகலில் உள்ள தனியார் பள்ளி
ஆனேகலில் உள்ள தனியார் பள்ளி

கர்நாடகா மாநிலம், பெங்களூரு மாவட்டத்தில் உள்ள ஆனேகல் தாலுகாவில் உள்ள ஹுலிமங்களாவில் உள்ள ட்ரெமிஸ் வேர்ல்ட் பள்ளிக்கு நேற்று மாலை திடீரென வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் வந்தது. அத்துடன் பள்ளியின் மேஜையின் அடியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தபாலும் வந்தது.

பள்ளியில் நடைபெற்ற வெடிகுண்டு சோதனை
பள்ளியில் நடைபெற்ற வெடிகுண்டு சோதனை

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார் பள்ளிக்கு விரைந்து பள்ளி முழுவதும் சோதனையிட்டனர். ஆனால், பள்ளியில் வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதனால் பள்ளி நிர்வாகத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ராமேஸ்வரம் கஃபே ஓட்டல் குண்டு வெடிப்பு
ராமேஸ்வரம் கஃபே ஓட்டல் குண்டு வெடிப்பு

பெங்களூருவில் உள்ள 48 பள்ளிகளுக்கு டிசம்பரில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதன் தொடர்ச்சியாக மார்ச் 1- ம் தேதி பெங்களூரு புரூக்பீல்டில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்தனர்.

அதன்பிறகு முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் உள்ளிட்ட பல தலைவர்களுக்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. 25 லட்சம் டாலர் (ரூ. 20 கோடி) கொடுக்கவில்லை என்றால் பேரழிவு நிச்சயம் என அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆனேகலில் உள்ள பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது போலீஸாருக்கு கவலையை ஏற்படுத்தியுள்து.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in