46 கோடி ரூபாய்க்கு வரி செலுத்துங்கள்... வருமான வரித்துறை நோட்டீஸை பார்த்து கல்லூரி மாணவர் அதிர்ச்சி!

வங்கிக் கணக்கில் ரூ.46 கோடி பணப் பரிவர்த்தனை தொடர்பாக போலீஸில் புகார் அளித்த கல்லூரி மாணவர்
வங்கிக் கணக்கில் ரூ.46 கோடி பணப் பரிவர்த்தனை தொடர்பாக போலீஸில் புகார் அளித்த கல்லூரி மாணவர்

மத்தியப் பிரதேசத்தில் கல்லூரி மாணவரின் பான் எண்ணை தவறாக பயன்படுத்தி அவரது வங்கிக் கணக்கில் ரூ.46 கோடி பரிவர்த்தனை நடந்துள்ளது. வருமான வரி செலுத்த கோரி நோட்டீஸ் வந்ததால் அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

வருமான வரி
வருமான வரி

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரமோத் குமார் தண்டோடியா. கல்லூரி மாணவரான இவரது பான் கார்டு மூலம் மும்பை, டெல்லியில் இயங்கி வரும் ஒரு நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் வங்கிக் கணக்கில் ரூ.46 கோடி பணப் பரிமாற்றத்துக்கு வருமான வரி செலுத்த வேண்டும் என கோரி நோட்டீஸ் வந்துள்ளது.

இதன் பிறகே பிரமோத் குமாருக்கு தனது வங்கிக் கணக்கில் இத்தகைய பணப் பரிவர்த்தனை நடந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் வருமான வரித் துறை தொடர்புடைய அலுவலர்களிடம் இது தொடர்பாக விசாரித்துள்ளார். அதில், பிரமோத் குமாரின் பான் எண், மேற்படி நிறுவனத்தின் பான் எண்ணாக சேர்க்கப்பட்டு, பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மாணவர் பிரமோத் குமார் தண்டோடியா.
மாணவர் பிரமோத் குமார் தண்டோடியா.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரமோத் குமார், போலீஸில் புகார் அளிக்க முயன்றார். ஆனால் அவரது புகாரை உள்ளூர் காவல் துறையினர் பெற்றுக் கொள்ளாமல் அலைக்கழித்ததாகவும், அதைத்தொடர்ந்து குவாலியர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (ஏஎஸ்பி) அலுவலகத்தில் நேற்று புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏஎஸ்பி- கே.எம்.ஷியாஸ் கூறுகையில், “தனது வங்கிக் கணக்கில் முறைகேடாக ரூ.46 கோடி பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாக புகார் வந்துள்ளது. அவரது வங்கிக்கணக்கு விவரங்களை ஆராய்ந்ததில் ஒரு நிறுவனம் இவரது பான் எண்ணை தவறாக பயன்படுத்தி இந்த பணப்பரிவர்ததனையை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in