டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

மதுபான கொள்ளை; தமிழக முதல்வரை விசாரிக்க வேண்டும் - டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!

டெல்லி, தெலங்கானா போன்ற மாநிலங்களில் நடந்தது போல தமிழகத்திலும் மதுபான கொள்ளை நடைபெறுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தமிழக அரசு, தமிழக முதல்வர் வரைக்கும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

தென்காசி தனியார் விடுதி ஒன்றில் வாக்குச்சாவடி முகவர் பயிற்சி கூட்டம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி, ''டெல்லி, தெலங்கானா போன்ற மாநிலங்களில் நடந்தது போல தமிழகத்திலும் மதுபான கொள்ளை நடைபெறுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தமிழக அரசு, தமிழக முதல்வர் உட்பட அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதனை சாதாரணமான விவகாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது” என தெரிவித்தார்.

தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசிய அவர், “யாருடன் கூட்டணி என இன்னும் முடிவு செய்வதற்கு காலம் இருக்கிறது. நாளுக்கு நாள் திமுகவின் செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைந்து வருகிறது. அரசின் எந்த ஒரு திட்டமும் மக்களுக்கான திட்டமாக இல்லை. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய காலம் வந்து விட்டது’’ என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

அதிர்ச்சி... காரில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்; சோதனையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்

10 லட்ச ரூபாய் செலவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண்!

ரசிகர்களுக்கு விருந்து... உலகக்கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!

அதிர்ச்சி... கணவருடன் சண்டை... 19 வயது பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in