`இந்த மாதிரியான அரசை நான் பார்த்ததே இல்லை'- சித்தராமையாவை சாடும் அமைச்சர் துரைமுருகன்

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

``எத்தனையோ அரசுகளை பார்த்திருக்கிறேன். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி காவிரி தண்ணீரைத் திறந்துவிடாமல் முரண்டு பிடிக்கும் இந்த மாதிரியான அரசை நான் பார்த்ததில்லை'' என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காவிரியில் நாளை முதல் 15 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 2600 கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் நேற்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வரும் நவ.3ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் கூடவுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ''காவிரி ஒழுங்காற்று குழு ஒழுங்காக பணியாற்றவில்லை. காரணம் நாளொன்றுக்கு 13,000 கன அடி தண்ணீர் திறந்து விடச் சொல்லி கேட்டிருந்தோம். ஆனால் 2600 கன அடி தண்ணீர் திறந்து விடுகிறோம் என கூறியிருக்கிறார்கள். காவிரி நீர் மேலாண்மை குழு 3ம் தேதி கூடுகிறது. அவர்களிடம் மேல் முறையீடு செய்ய வேண்டும் அல்லது நீதிமன்றம் செல்ல வேண்டும்.

26.10.2022 வரை வழங்க வேண்டியது 140 டிஎம்சி தண்ணீரில், அவர்கள் வழங்கியது 56.4 டிஎம்சி மட்டுமே. பற்றாக்குறை 83.6 டி.எம்.சி யாக உள்ளது. குறைபாடு விகிதாசாரம் நிலுவை 13.03 டிஎம்சி கொடுக்க வேண்டும். அதில் 3.41 டிஎம்சி நீர் தான் கொடுத்து இருக்கிறார்கள்.

குறைபாடு விகிதாசாரம் என நவம்பர் மாதம் கொடுக்க வேண்டிய தண்ணீர் 16.44 டிஎம்சி. அதனையும் கொடுக்கவில்லை. இதுவரை இருந்த எந்த அரசும் இப்படி முரண் பிடித்தது இல்லை. எதிரி நாட்டோடு சண்டை பிடிப்பது போல நடந்து கொள்கிறார்கள். நாம் ஏதோ சலுகை கேட்பது போல நினைக்கிறார்கள். இந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் விதிக்கும் விதிமுறை படிதான் அனைத்து மக்கள் நடக்க வேண்டும். ஆனால் ஒரு மாநிலத்தின் அரசாங்கமே அப்படி நடந்துகொள்ளவில்லை என்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

10 முதலமைச்சரை பார்த்துள்ளேன். நீர்வளத்துறை அமைச்சர்களை பார்த்துள்ளேன். சித்தராமையா எனக்கும் தலைவருக்கும் வேண்டியவர். நீர் பாசனத்தை அமைச்சர் டி.கே.சிவக்குமார் எனக்கு தெரிந்தவர். ஆனால் இவர்கள் இப்பொழுது பிடிவாதத்தில் இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

3ம் தேதி காவிரி நீர் மேலாண்மை குழு கூடுகிறது. அங்கு மேல் முறையீடு செய்வோம். அங்கு நீதி கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனம் காட்டுவதாக தெரிவித்தார்.

ஆளுநர் நடவடிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், இது ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் அனைவரும் அரசியல் அமைப்புப்படி நடந்துக் கொள்ள வேண்டும். ஆனால் பெரியவர்களாக இருப்பதால் சிலர் அரசியல் அமைப்பின்படி நடந்து கொள்ள மாட்டேன் என சொல்வது தவறானது. பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் சட்டத்தை மதிக்கமாட்டேன் என கூறினால், சாதாரண மக்கள் எப்படி சட்டத்தை மதிப்பார்கள். ஆளுநரின் போக்கை மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் வேடிக்கை பார்ப்பது சரியில்லை என குற்றம்சாட்டினார்.

இதையும் வாசிக்கலாமே...

பாரதியார் சிலை முன்பு சாதி மறுப்பு திருமணம்... காதல் ஜோடிக்கு குவியும் பாராட்டு!

கடலூரில் பரபரப்பு... ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீஸார் சோதனை!

பாரில் நடனமாடிய பெண்களுடன் தகராறு... தட்டிக் கேட்டவருக்கு கத்திக்குத்து... 'டெரர்' வாலிபரிடம் விசாரணை

சோகம்…'அங்கிள் பெர்ஸி' திடீர் மரணம்... இலங்கை கிரிக்கெட் அணி அதிர்ச்சி!

அதிர்ச்சி... மனைவி தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற கணவன்... போலீஸில் சரண்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in