பரபரப்பு... தமிழகத்திற்கு எதிராக பெங்களூருவில் மீண்டும் பந்த்... 44 விமான சேவைகள் ரத்து!

விமான நிலையத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள்
விமான நிலையத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள்
Updated on
2 min read

தமிழகத்திற்கு தண்ணீர் விடாக்கூடாது என்பதை வலியுறுத்தி கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூர்ரு செல்ல இருந்த 44 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து கர்நாடக மாநிலத்திடம் போராடி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் விநாடிக்கு 25,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்தியிருந்தது. இதனை கர்நாடகா ஏற்கவில்லை. எனவே, உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது. அதேபோல கர்நாடக அரசும் நீதிமன்றத்தை நாட காவிரி மேலாண்மை ஆணையம் இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது கர்நாடகாவில் சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என வலியுறுத்தி மண்டியா, சாம்ராஜ் நகர், மைசூர், பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் பெங்களூருவில் கடந்த 26-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தியிருந்தன.

இதனையடுத்து வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட சலுவாளி கட்சி, கன்னட ரக்‌ஷன வேதிகே (பிரவீண்) ஆகிய அமைப்புகள், இதே விஷயத்திற்காக இன்று பந்த் போராட்டத்தை நடத்துகின்றன.

ஸ்டாலின் படத்திற்கு அவமரியாதை
ஸ்டாலின் படத்திற்கு அவமரியாதை

இந்த போராட்டத்திற்கு சுமார் 2,000 கன்னட அமைப்புகளும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் அதவளித்துள்ள நிலையில், பெங்களூரு டவுன் ஹாலில் இருந்து சுதந்திர பூங்கா வரை பேரணி செல்ல போராட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் நேற்று நள்ளிரவு முதல் காவல்துறை பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்திருக்கிறது. பந்த் போராட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும், போராட்டம் நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பல்வேறு இடங்களில் இருந்து பெங்களூரு வர இருந்த 44 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கன்னட அமைப்பினர்,தமிழக முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தும், துடைப்பத்தால் அடித்தும், தீயிட்டு கொளுத்தியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

மக்களவை தேர்தலில் களமிறங்கும் பிரியங்கா... போட்டியிடப் போவது உ.பியா... ம.பியா?

இன்று கடைசி தேதி... மத்திய அரசு நிறுவனத்தில் மாதம் ரூ.1,77,500 வரை சம்பளம்; உடனே அப்ளை பண்ணுங்க!

ஒரே தேர்வு மையத்தில் அதிக தேர்ச்சி...எஸ்.ஐ தேர்வு குறித்து விசாரணை கேட்கும் அண்ணாமலை!

சடசடவென சரிந்து வரும் தங்கத்தின் விலை...மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

இளைய மகளுடன் திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in