இன்று கடைசி தேதி... மத்திய அரசு நிறுவனத்தில் மாதம் ரூ.1,77,500 வரை சம்பளம்; உடனே அப்ளை பண்ணுங்க!

இன்று கடைசி தேதி... மத்திய அரசு நிறுவனத்தில் மாதம் ரூ.1,77,500 வரை சம்பளம்;  உடனே அப்ளை பண்ணுங்க!

மத்திய பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் காலியாக உள்ள 204 ஆராய்ச்சியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்க இன்று செப்.29ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவான டிஆர்டிஓ, வேலை தேடுபவர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளது. இதன் மூலம் விஞ்ஞானி-பி வகைப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது. தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.drdo.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த காலக்கெடு இன்றோடு (செப்.29) நிறைவடைகிறது.

டிஆர்டிஓ
டிஆர்டிஓ

மொத்தம் 204 காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல் படிப்பு முடித்திருக்க வேண்டும். கிராஜுவேட் ஆப்டிட்யூட் டெஸ்ட் (கேட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தகவல் விண்ணப்ப படிவத்தில் வழங்கப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர்களின் வயது 18 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். பட்டியல் பிரிவினருக்கு மத்திய அரசின் விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு முறை

தனிப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நேர்காணல் தேதி மற்றும் இடம் பற்றிய விவரங்கள் தனி அழைப்புக் கடிதம் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

சம்பளம்

டிஆர்டிஒ விஞ்ஞானி பி ஆட்சேர்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் சம்பளம் மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை. இதற்கிடையில், தேசிய பாதுகாப்புத் துறையில் டிஆர்டிஓ-வின் பங்கு முக்கியமானது. நாட்டிற்கு பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மேம்பட்ட ஆயுதங்கள் தயாரிப்பிலும் தன்னிறைவு அடைந்துள்ளது.

டிஆர்டிஓ நாடு முழுவதும் 51 ஆராய்ச்சி மையங்களைக் கொண்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆயுதங்கள், மின்னணுவியல், ஏவுகணைகள், போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் போன்றவைகளில் இந்த மையங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in