இளைய மகளுடன் திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி!

இளைய மகளுடன் திரைப்பட  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி!

மகளின் மறைவுக்கு பிறகு முதல்முறையாக நடிகரும், இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அண்மையில் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரை மட்டும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

மகள் மறைவை தொடர்ந்து உருக்கமான கடிதம் வெளியிட்ட விஜய் ஆண்டனி, தற்போது மகள் மீராவுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன் என்றார். தனது மகள் தன்னிடம் பேசிக் கொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், மகள் மறைவுக்கு பிறகு முதல் முறையாக விஜய் ஆண்டனி திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தன்னுடன் இளைய மகள் லாராவையும் அவர் அழைத்து வந்திருந்தார்.

சென்னை வடபழனியில் சி.எஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் 'ரத்தம்' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், நந்திதா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.

இந்த துயரமான நேரத்திலும் தயாரிப்பாளர் நலன்கருதி நிகழ்வுக்கு வந்திருந்த விஜய் ஆண்டனிக்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in