பாஜக வரக்கூடாது என்பதற்காக கதவைச் சாத்தி விட்டோம்... அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்த ஜெயக்குமார்!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

பாஜகவுடனான கூட்டணிக்கு அதிமுகவின் கதவு சாத்தப்பட்டு விட்டது. எனவே, முன் வைத்த காலை பின்வைக்க போவதில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கூட்டணி குறித்து அமித் ஷா அவர் கட்சியின் நிலைப்பாட்டை கூறியுள்ளார். கூட்டணியின் கதவுகள் திறந்து இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை பொறுத்தவரை, பாஜக ஒரு காலத்தில் தோழமையாக இருந்தது. இப்போது அரசியல் ரீதியாக எதிர்க்கின்ற கட்சி. எங்கள் கட்சியின் முன்னோடிகள் எம்.ஜி.ஆர், அண்ணா, ஜெயலலிதா பற்றி சிறுமைப்படுத்தும் விதமாக ஒரு மாநில தலைவர் கடுமையான அளவிற்கு விமர்சித்துள்ளார். தொடர்ச்சியாக எங்களை சிறுமைப்படுத்தக் கூடிய தலைவரை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.” என்று கேள்வி எழுப்பினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

மேலும், “அதிமுக தொண்டர்களும் சரி, பொதுமக்களும் சரி, பாஜக கூட்டணியை விரும்ப மாட்டார்கள். எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி சேரக்கூடாது என, ஒட்டுமொத்தமாக பட்டாசு வெடித்த வரலாறு உண்டா? பாஜகவை கழட்டிவிட்ட பிறகு தமிழ்நாடு முழுவதும் அதிமுக கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்தார்கள். பாஜகவோடு இப்போதில்லை எப்போதும், எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என ஒரு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்காக அதிமுக தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் வெடி வெடித்துக் கொண்டாடினார்கள்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “எங்கள் நிலைப்பாட்டை பொறுத்தவரை பாஜவுக்கான கதவு சாத்தப்பட்டு விட்டது‌. அவர்கள் திறந்து வைத்திருக்கலாம், அவர்கள் வரக்கூடாது என்று சாத்தி விட்டோம். இதுதான் எங்கள் நிலைப்பாடு. எப்போதும் நாங்கள் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம்.” என்றார். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது குறித்து ஜெயக்குமாரிடம் கேட்ட போது, 10 பேர் சேர்ந்தால் யார் வேண்டுமானாலும் கட்சி தொடகலாம் என விமர்சித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

ரசிகர்கள் அதிர்ச்சி... விஜய் கட்சிக்கு TVK பெயர் கிடைக்காது!?

அதிகாரிகளை அலறவிடும் ஆட்சியர்... திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

ரூ.200 கோடி சம்பளத்தை உதறிய விஜய்... பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு!

உதகையில் பயங்கர நிலச்சரிவு; மண்ணில் புதைந்து 7 பேர் பலியான சோகம்

தாயைக் கொன்ற மகன்... வழக்கில் திடீர் திருப்பம்... கணவனே மனைவியைக் கொன்றது அம்பலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in