தலைமறைவான ஜாபர் சாதிக்கின் வங்கிக் கணக்குகள் முடக்கம்... போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி!

ஜாபர் சாதிக்
ஜாபர் சாதிக்

போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் தேடப்பட்டு வரும் முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கின் வங்கி கணக்குகள்  முடக்கம் செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜாபர் சாதிக்
ஜாபர் சாதிக்

மேற்கு டெல்லியில் உள்ள கைலாஸ் பார்க் பகுதியில்   செயல்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்று  டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகளால் அண்மையில் கைது செய்யப்பட்டது.  அதில் சென்னையை சேர்ந்த முகேஷ் (3), முஜிபுர் ரகுமான் (34), விழுப்புரத்தை சேர்ந்த அசோக் (34) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  

இந்த கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது  தமிழ் சினிமா தயாரிப்பாளரும், முன்னாள் தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்பது பெரிய வந்தது.  இந்த நிலையில் அவர் தலைமறைவானார். இதையடுத்து தி.மு.க.வில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டார். 

உதயநிதி ஸ்டாலினுடன் ஜாபர் சாதிக்
உதயநிதி ஸ்டாலினுடன் ஜாபர் சாதிக்

அந்த வழக்கில் தொடர்புடையதாக மேலும் சிலரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். சென்னை மயிலாப்பூர் சாந்தோம் அருணாச்சலம் சாலையில் உள்ள ஜாபர் சாதிக்கின் இல்லத்தில் 'டெல்லி போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்' என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாகியுள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸும் கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜாபர் சாதிக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் நிலம் மற்றும் வங்கி கணக்குகள் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து ஜாபர் சாதிக்  தொடர்புடைய எட்டு வங்கி கணக்குகளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் முடக்கி உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

2 தொகுதிகள் தான்... திமுக கறார்: பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் விசிக நிர்வாகிகளுடன் திருமா ஆலோசனை!

வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் பலாத்காரம்: 7 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

பேருந்தில் நடந்த பயங்கர சம்பவம்.. நடிகை ஆண்ட்ரியா அதிர்ச்சி பேட்டி!

தபால் ஓட்டு... சீனியர் சிட்டிசன்களுக்கு முக்கிய அறிவிப்பு!

போதையில் தள்ளாடும் தமிழகம்... அரசின் மெத்தனப்போக்கு காரணமா? ஒன்று சேரும் எதிர்கட்சிகள்!?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in