அமித் ஷாவை பிரதமராக்க முயற்சிக்கிறார்கள்... கேஜ்ரிவால் பரபரப்புப் பேட்டி!

டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்
டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்

டெல்லியில் ஆம் ஆத்மியை வீழ்த்த முடியாததால் என்னை பாஜக அரசு சிறையில் அடைத்தது என முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறினார்.

டெல்லி கலால் கொள்கை தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

50 நாள் சிறையில் இருந்த அவருக்கு உச்ச நீதிமன்றம் நேற்று இடைக்கால ஜாமீன் வழங்கியது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அவர் பிரச்சாரத்தில் ஈடுபடும் வகையில் இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தொண்டர்களை சந்தித்த கேஜ்ரிவால்
சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தொண்டர்களை சந்தித்த கேஜ்ரிவால்

ஜாமீன் காலத்தில் முதல்வர் கேஜ்ரிவால் தனது அலுவலகம், தலைமைச் செயலகத்துக்கு செல்லக் கூடாது, துணை நிலை ஆளுநர் கையொப்பம் கட்டாயம் தேவைப்படும் கோப்புகள் தவிர இதர கோப்புகளில் கையொப்பமிடக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது.

இந்நிலையில், சிறையிலிருந்து நேற்று மாலை வெளியே வந்த கேஜ்ரிவாலை ஆம் ஆத்மி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதேபோல் வீட்டிற்குச் சென்ற கேஜ்ரிவாலை அவரது குடும்பத்தினரும் உற்சாகமாக வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து கேஜ்ரிவால் இன்று காலை டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமன் கோயிலுக்கு வந்து வழிபட்டார். அவருடன் மனைவி சுனிதா கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரும் உடன் வந்தனர்.

அதைத் தொடர்ந்து மதியம் ஒரு மணிக்கு ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்தில் கேஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

“நான் சிறையில் இருந்து நேராக உங்களிடம் வருகிறேன். 50 நாட்களுக்குப் பிறகு உங்களுடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் எனது மனைவி, முதல்வர் பகவந்த் மானுடன் ஹனுமான் கோயிலுக்குச் சென்றேன். பஜ்ரங் பாலியின் ஆசீர்வாதம் எங்கள் கட்சி மீதும் எங்கள் மீதும் உள்ளது. அவரது அருளால் தான் நான் இன்று உங்களிடையே இருக்கிறேன்.

நான் சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறேன். அதற்காக 140 கோடி இந்தியர்களின் உதவியை கேட்கிறேன். பாஜகவில் இருந்து 75 வயதை எட்டும் அனைவரும் ஓய்வுபெறுவார்கள் என்று 2014-ம் ஆண்டு மோடி அறிவித்தார். அப்படியானால் உங்கள் பிரதமராக யார் இருப்பார் என்று நான் பாஜகவிடம் கேட்க விரும்புகிறேன். மோடி செப்டம்பர் 17 அன்று ஓய்வுபெறுவார்.

அவர்கள் மீண்டும் வெற்றி பெற்றால், அமித் ஷாவை பிரதமராக்கி யோகி ஆதித்யநாத்தை வெளியேற்றுவார்கள். ஆனால், மத்தியில் மோடி அரசு ஆட்சி அமைக்கப் போவதில்லை. அதற்குப் பதிலாக இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்.

எனக்கு முதல்வர் பதவி முக்கியமில்லை. இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளில் பல தேர்தல்கள் நடந்துள்ளன. ஆம் ஆத்மி டெல்லியில் அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளது. இவ்வளவு பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி வென்ற பிறகு, டெல்லியில் வெற்றி பெற முடியாது என்பது அவர்களுக்கு (பாஜக) தெரியும். அதற்கு பதிலாக கேஜ்ரிவாலை சிறையில் அடைக்க அவர்கள் முடிவு செய்தனர். இதனால் எனது அரசு முடங்கியது. நாட்டிற்காக 100 முறை முதல்வர் பதவியை தியாகம் செய்ய தயாராய் இருக்கிறேன்”

இவ்வாறு கேஜ்ரிவால் பேசினார்.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த அதிர்ச்சி...  சிவகாசியில் மற்றொரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!

கனமழை: கரை புரண்டு ஓடும் வெள்ளத்தால் 50 பேர் பலி!

உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் ராணுவ உதவி... அள்ளி வழங்கும் அமெரிக்கா!

மனைவி நடத்தையில் சந்தேகம்... 2 குழந்தைகளைக் கொன்று விட்டு கணவனும் தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in